பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- செவிலிக்கிருளைவரைந்தமை யுணர்த்தல் (இ-ஸ்.) பாங்கி செவிலித்தாய்க்குத் தலைவன் தலைவியை மணந்தமை தூதராற்றெரிந்து கூறுதல். சேல்காட்டும் வேல்விழிச் செல்வியைத் தம்மனை சேர்ந்தவர்தா மால்காட்டு மம்மணஞ் செய்தன ரென்றொற்றர் வந்துரைத்தார் கோல்காட்டு நற்குடைக் கோன்ஷம்சுத் தாசீன் குவட்டிலிதைச் சூல்காட்டு மன்னையர்க் கன்னைநல் லாயெங்ங்ன் சொல்லுவதே. (358) வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்தல். (இ-ஸ்.) வெளி. . அளிக்குங் கொடைக்கரத் தான்ஷம்சுத் தாசீ னருட்சிலம்பர் துளிக்கு மலர்க்குழற் றோகையை முன் மணஞ் சூழ்ந்தசெய்தி. தெளிக்கநல் வித்தகர் செப்பினர் நாமுந் தெரிசித்ததைக் களிக்குந் தவமுற்றி லோமன்னை யேயென்ன காலமிதே. (35%) தலைவன் பாங்கிக்கியான் வரைந்தமை நூமர்க்கியம்பு சென்றென்றல். (இாள்.) விவாகமுடித்து மீண்டுவந்ததலைவன்தலைவியை விகாகஞ்செய்தமை உன் சுற்றத்தார்க்குச் சென்று சொல்லென்று பாங்கியினிடத்துக் கூறுதல். எந்தமர் சூழ்ந்த விருங்குழு நாப்ப ணிசைந்திருந்திந் நந்தமர் கந்தா நங்கையை வேட்டவந் நன்னலத்தை வந்தமர் கண்டபெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி னுந்தமர் கேட்ப துவலுதி சென்றென்ற னுண்ணிடையே, (360) பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தல். (இ-ள்.) வெளி மணந்தே னெனுஞ்சொன் வருமுன மேபசு மாமயிலைத் தணந்தே மறுகுமத் தையனல் லாட்கென்றுஞ் சாரலர்தேர்க் கணந்தேய்த் தொழிக்குமெம் மாஷம்சுத் தாசீன் கனகவெற்பி னினந்தே ரயிலிறை யேயறைந் தேனத்த நீர்மையையே. (36/) இவற்றுள் - நற்றாய் மணமயர் வேட்கையிற் செவிலியை வினா தலெர்ன்றும் வினாதற்கும், வரைந்தமை பாங்கி செவிலிக் குணர்த்த லும் வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தலும் பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தலுமாகிய மூன்றும் செப்பற்கும், யான்வரைந்தமைதுமர்க்கியம்பு சென்றென்ற லொன்றும்மேவற்கு முரியன. தன்மனைவரைதல் முற்றிற்று. 163