பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்போக் கிடையிடு. அஃதாவது நம்மனையில் வரைந்து கொள்ளாது தன்னுரில் வரைந் தானென்று தலைவி சுற்றத்தார் வெறுப்படைதலால் தலைவியையுடன் கொண்டு போம்போது தலைவி சுற்றத்தா ரிடையிடுபட்டு மீண்டு தலைவி வருதல். அதுபோக்கறிவுறுத்தல் வரவறிவுறுத்தல் நீக்கம் இரக்கமொடு மீட்சி என நான்கு வகைப்படும்; அவை நீங்குங் கிழத்தியர் பாங்கியர் தமக்குத் தன்செலவுணர்த்தி விடுத்தல் முதல் தலைமகளவன்புற நோக்கிக்கவன்றாற்ற லீறாகிய ஆறு விரிகளையுடையன; அவை வருமாறு: நீங்குங் கிழத்தி பாங்கியர்தமக்குத் தன்செலவுணர்த்தி விடுத்தல். (இ-ள்.) ஐம்பத்தைந்தாநாள் தன்னுரைவிட்டு நீங்குந் தலைவி எதிர்வருவார் தம்மொடு தலைவனுடன் செல்லுந் தன் செலவைப் பாங்கியர்க்குச் சொல்லி யனுப்புதல். சூலுற்ற வானெனு மால்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிசென் னூலுற்ற நுண்ணறி விருற வாதியர் நோவறநற் பாலுற்ற நீரென வன்பர்பின் னானுமிப் பாழ்ஞ்சுரத்தின் மேலுற்ற வாறறை விரய ராதென்றன் மெல்லியர்க்கே. (362) தலைமகடன்செலவின்றாட்குணர்த்தி விடுத்தல். (இ-ள்.) தலைவி தலைவனுடன் போதலைத்தன்றாய்க்குச் சொல்லி யனுப்புதல். கூவி யருளவல் லோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா யாவி யிழந்த வுடல்போ லெனைவிட் டழுங்கனைக்கிப் பாவி யொருதிருக் காளையின் வெஞ்சுரம் பற்றினனென் றோவி லருளுடை யிர்பணிந் தேனுவந் தோது.தற்கே. (363) - நற்றாய்க்கந்தணர் மொழிதல். (இன்)வெளி அன்பே யுருவெடுத் தன்னவந் துற்றவொ ராண்டகையின் பின்பே கனற்பொறி பெய்பாற் கானிலுன் பேதைசற்று முன்பே செலவுணர்ந் தோமனை யேயெதிர் முன்னலர்தம் மென்பே யொடிக்குமெம் மான்ஷம்சுத் தாசி னிருங்கிரிக்கே. (364) நற்றா யறத்தொடு நிற்றலிற்றமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவ்ர்க்குணர்த்தல். (இஸ்.) நற்றாய் தலைவியின்களவை வெளிப்படுத்தியதனாற் சுற்றத்தார் பின்வருதலைத் தலைவிபார்த்துத் தலைவனுக்கு அறிவித்தல். 164