பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசற் கெழுபுயத் தோன்ஷம்சுத் தாசின் பொதியவெற்பிற் பேசற் கருமயில் வாண்மழு கோதண்டம் பெய்கனையும் வீசற் கெனவிரைந் தெந்தைய ரன்ப விளக்கிடைபல் - லீசற் குவிந்தெனச் சூழ்ந்தனர் பார்நம் மிரதத்தையே, - (365) தலைமக டன்ன்னத்தலைமகன் விடுத்தல். (இ-ஸ்.) வெளி - நிதியிற் பெருகுபு மான்ஷம்சுத் தாசீ ரிைமிர்சிலம்பின் மதியிற் பெருகு மலர்முகத் தாயென்றும் வாய்ந்தபஞ்சுப் பொதியிற் பெருகு நெருப்பனை வேனெதிர் போந்தவர்க்குன் பதியிற் பெருகுற வேலஞ்சு வேனி பணிந்தருளே. (366) தமருடன் செல்பவளவன்புற நோக்கிக்கவன்றாற்றல். (இஸ். சுற்றத்தாருடன் செல்லப்பட்டதலைவிஅவன்புறங்காட்டிப்போதலை நோக்கிக் கவலைப்பட்டுத் தேறுதல். - என்னுயி ரொன்றே பொருளெனு நாட்டத் தெதிர்ந்தவிந்த மன்னுயிர் காத்த மகிபர்க்கன் றோவுற்ற வையமெல்லாந் தன்னுயி ரென்னநல் லோன்ஷம்சுத் தாசீன் றரியலர் போந் தின்னுயிர் வாழு மெரியழற் கானத் திரும்புகழே. (367) இவற்றுள் நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத்தன்செல்வுணர்த்தி விடுத்தலும்தன் செலவின் றாட் குணர்த்தி விடுத்தலும் ஈன்றாட் கந்தணர் மொழிதலுமாகிய மூன்றும் போக்கறி வுறுத்தற்கும், ஈன்றா ளறத்தொடு நிற்றலிற் றமர்பின் சேறலைத் தலைவி கண்டுரைத்த லொன்றும் வரவறி வுறுத்தற்கும், தலைமகளைத் தலைமகன் விடுத்தலொன்று நீக்கற்கும், தமருடன் செல்பவ ளவன் புறநோக்கிக்கவன் றாற்றலொன்றும் இரக்கமொடு மீட்சிக்குமுரியன. இதுவரையும் ஐம்பத்தைந்தாந்ாள் நிகழ்ச்சி உடன்போக் கிடையீடு முற்றிற்று. வரைவு அஃதாவது:- ஐம்பத்தாறாநாள்தலைவன் மீண்டு தலைவி யில்லின் வராநின்றுழித் தலைவிதமரெதிர்கொண்டுபோயழைத்துவந்தபின் உலகவியற்கையின்படிய்லவிதமாக அருங்கல முதலிய வேண்டுவனகொடுத்துப்பெரியோரையுஞ்சான்றோரையுமுன்னிட்டு மணச்சடங்குடனேவதுவை முடித்தல்; இதற்கு வகையும் விரியுமில்லை. 165