பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“பண்டிதர்', 'மகாமதி', 'கலைக் கடல்', 'அல்லாமா போன்ற பட்டங்களைத் தமிழ்ப் பெருமக்கள் சூட்டி மகிழ்ந்தனர். ஷம்சுத்தாசீன் கோவை 'கோவை' என்பது தமிழிலுள்ள சிற்றிலக்கிய வகைகள் தொண்ணுற் றாறுள் ஒன்றாகும். - 'ஆய்ந்த கலித்துறை தான் நானு றகப்பொருண் மேல் வாய்ந்த நற் கோவையாம்' (15) - என வெண்பாப் பாட்டியல் கூறும் இலக்கணத்திற்கேற்ப, கோவை என்பது அகப்பொருள் பற்றியது: கலித்துறைப் பாநானூற்றில் அமைவதும் ஆகும். நாற்கவிராச நம்பியின் அகப் பொருள் விளக்கம்' கூறும் வரன் முறையில் இக்கோவையின் அகத்துறை நிகழ்வுகள் அமைகின்றனவாதலால், 'நம்பியகப் பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய் அமைந்த செய்யுட்களைக் கிளவிகளாகப் பகுத்தும், துறைகளாக விரித்தும் வரலாற்றுத் தொடர்ச்சியமையப் பாடப் படுவதாக்லின் 'கோவை’ எனப்பட்டது” எனத் தெளிவுரை தருவார் பாவலரவர்களின் தலை மாணாக்கரும் முதுபெரும் புலவருமான தெங்கம்புதூர் தா. சாஸ்தாங்குட்டிப் பிள்ளையவர்கள். பாடுவதன் அருமையையுணர்ந்தவராய், 'யாவும் பாடி, பின் கோவை பாடு' என அறிவுரை புகன்றார் ஒரு புலவர். பாவலரவர்கள் இயற்றியனவாக அறியப்படும் கோவை நூல்கள் நான்கினுள் எமது பாட்டனாரவர்களை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது "ஷம்சுத்தாசீன் கோவை ஆகும். "கிளவித் தலைவனும் கிளவித் தலைவியும் பெயர்கள் சுட்டி அறியப் படார்' எனும் விதியினுள் அமைந்ததும், பழந்தமிழருக்குரிய அன்பின் ஐந்திணை சார்ந்த ஒழுகலாறுகளுள் களவினைத் தலை இயலாகக் கொண்டது மான அகப் பொருள் நாடகம் நுவலும் கோவை நூலுக்கு, இஸ்லாமிய நெறி முறை வழுவாது வாழ்ந்திருந்த தமிழ் முஸ்லிம் வள்ளல் ஒருவரை பாட்டுடைத் தலைவனாக்கி, பாடல்கடோறும் அவரது பெயரும் கொடைச் சிறப்பும் விதந்து நவின்றும், அவர் சார்ந்தனவற்றின் பெருமைகள் புகன்றும் சங்கத் தமிழ் நிகர்த்த செம்மையும் செறிவுஞ் சான்ற இலக்கிய இன்பம் வழங்கியுள்ள மகாமதியவர் களின் புலமை நயம் போற்றத்தக்கதாகும். பாவலர் தாமும் இஸ்லாமியப் பண்புகளை மிகவும் பேணி வாழ்ந்திருந்த தமிழ் முஸ்லிம் புலவர் ஆவார். இந்நூலின் காப்புச் செய்யுளினைத் தாம் சார்ந்துள்ள சமயக் கோட்பாட்டினின்றும் வழுவாது அவர் யாத்துள்ள பாங்கும் நினைந்து பாராட்டத் தக்கதாகும். - 15