பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்றோர் பெரியோரை முன்னிட்டருங்கலந் தந்து வரைந்துழிக் கண்டோர்மகிழ்ந்து கூறல். (இ-ள்.) சான்றோரையும் பெரியோரையுமுன்வைத்துக்கொண்டுதலைவன்அரிய ஆபரணங்களைத் தலைவிக்குக் கொடுத்து விவாகஞ் செய்ய; அதைப் பார்த்தவர் மகிழ்ந்து சொல்லுதல். அமையா வின்யத் தலர்மணம் போலிவ ரார்ந்தமனங் ക്രങ്ങഥധ് துலகிடைக் கொண்டவ ரார்களி கொள்ளநல்லோர் தமையா தரிக்குபு மான்ஷம்சுத் தாசீன் றடத்திடைநா - மிகையாத கண்ணொரு கோடிபெற் றோமில்லை யின்றைக்குமே. (368) இங்ங்னமொரு தலைவனுக்குந் தலைவிக்கும் ஒருகால் மணமுடிப்ப தன்றிப் பலகான் மணமுடிந்ததாகக் கூறுதல் உலகின்கண் வழங்குவ தன்றே, இவ்வாறு கூறியதென்னையெனின் உடன்போய்த் தன்னுரின் கண்ணே வரைதலு மீண்டுவந்து தன்மனையின் கண்ணேவரைதலும் பெரியோர்சான்றோரைமுன்னிட்டுத்தாய்தமரறிய மணச்சடங்கின் முறையே முடியாமையான் அவையிரண்டு மணமாகா, அஃதென்னை யெனின்? உலகியல்பின்கண் தாய்த மரறியாது மணச்சடங்கு மின்றி ஒருவன் உரிமைகருதித் தாலிகட்டு மணம் மணமென்றுலகின் கணுள்ளார், கைக்கொள்ளார்; அவர்க்கே மீண்டு மணச்சடங்குடனே மணமுடிப்பார்; ஆதலால் பெரியோர் முதலாயினாரை முன்னிட்டு அவள்மனையின்மனச்சடங்குடனே முடித்தலின், இதுவே மணமாயினவாறுணர்க. இதுவரைஐம்பத்தாறாநாள் எனக் கணக்கிட்டதுபோல மேல் நிகழ்ச்சி கணக்கிட முடியாதெனவறிக. வரைவு முற்றிற்று. கற்பியல் கற்பென்பது கற்பிக்கப்படுவது. கற்பித்த லாவதென்னையெனின் தலைவிக்கு அறிவும் ஆசாரமுந் தலைவனாலும் இருமுது குரவராலும் செவிலியாலும் பெரியோர் முதலிய சான்றோராலும்போதித்தல்; ஆதலாலிவ்வியல் கற்பியல் எனப்பெயராயிற்று. ஆயின், இவ்வாறு களவின்கனொழுகல் கற்பின்க னொழுகல் உலகின் கணின்றெனில் கூறுதும், அறிவுடையோர் மக்கட்கு மனஞ் செய்யங்கால் இத்தன்மையானை நினக்கு மணஞ்செய்ய நினைத்தோம்; இது நினக் கியைபோ? இயைபின்மையோ? என வினாவி அவரவர் கூற்றின் படிசெய்வர்; அவர் கூறாக்கால் குறிப்பானுணர்ந்து செய்வரெனக் கொள்க. இங்ங்னம் இருவருள்ளமும் ஒத்தவழி மணஞ் செய்தலியல் பாயிற்று. ஆகவே உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்ததாம்; உள்ளப்புணர்ச்சி 166