பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்ந்தபோதே மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்ததாயிற்று. இதனை 'உள்ளத்தாலுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற்கள்வே மெனல்" என்னுங்குறட்குப் பரிமேலழகர் உரையில் நினைத்தலுஞ் செய்தலோ டொக்கு மெனக் கூறியதனானுணர்க, எனவே உலகின்க ணிகழுங் கற்பொழுக்க மெல்லாங் கந்தருவ மணத்தின்வழிக் கற்பென்றே கொள்க. இக்கற்பு - மகிழ்வும் ஊடலும் ஊடலுணர்த்தலும் பிரிவும் பிறவும் பொருந்தி யதாய், இல்வாழ்க்கை பரத்தையிற் பிரிவு ஒதற்பிரிவு காவற் பிரிவு துதிற் பிரிவு துணைவயிற்பிரிவு பொருள்வயிற்பிரிவு எனஏழு பாகுபாடுடையது; அவற்றுள், இல்வாழ்க்கை அஃதாவது-தலைவனுந் தலைவியும் இல்லின் கண்ணே வாழுதலைக் கூறுதல்; அது-கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழச்சியென நான்கு வகைப்படும்; அவை-தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் முதல் அன்னவர்காதலறிவித்த லீறாகிய பத்துவிரிகளையுடையன; அவை வருமாறு: தலைமகன் றலைவிமுன்பாங்கியைப் புகழ்தல். (இன்)வெளி. - தன்றுயர் நோக்கார் பிறர்துயர் நோக்குவர் தாமெனநின் றென்றுயர் நோக்கி யிரும்பிணிக் கின்னமிழ் தென்னவுல கின்றுயர் நீக்குமிக் கோன்ஷம்சுத் தாசி னெழிற்சிலம்பி னின்றுயர் மாமன நேர்ந்தனை வாழியென் னேரிழையே. (369) தலைவனைப் பாங்கி வாழ்த்தல். (இாள்.) வெளி. - மணியொளி யாகி மல்ர்மன மாகி மரநிழலா யணியொளி வாய்ந்த வணங்கொடு நீயுமெ னண்னலென்றுழ் பணியொளி மாமுடி வேள்வும்சுத் தாசீன் பனிவரைவாய் நணியொளி போனணி வாழிபல் லாண்டிந்த நானிலத்தே. (370) பாங்கி தலைவியை வரையுநாளளவும் வருந்தாதிருந்தமையுரையாயென்றல். (இ-ஸ்.) தோழி தலைவியை நோக்கித் தலைவன் மணஞ்செய்யுமிதுகாறும் பொறுத்திருந்தமையைச்சொல்லென்று கேட்டல். மானா ரலரு மதனா ரலரு மருவியொன்றாய்த் தானார் பொழுது சகித்ததெவ் வாறன்பர் சாரளவுங் கானா ரலங்கற்பி ரான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற் றேனார் நறுங்குழ லாயுரை யாயிவண் டேர்ந்தெனக்கே. /37/ル 167