பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பெருமகளுரைத்தல். (இாள்.) தலைவிதான் வருந்தாதிருந்த காரணம் பாங்கிக்குக்கூறுதல். முன்னிலை விட்டுத் தணந்தன ரேனு முழுதுமுள்ளிற் றன்னிலை விட்டுத் தணந்தில ரேயவர் சார்ந்தபுகழ்ப் பொன்னிலை வாழ்புயத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பி லென்னிலைக் கேதிங் கிருந்துயர் நாளுமெ னேந்திழையே. - (372) தலைவனைப் பாங்கி வரையுநா ளளவு நிலைபெறவற்றிய நிலைமை - வினாதல். • , (இ-ள்.) தலைவியைத் தலைவன் விவாகஞ்செய்யும்வரை யுயிர் தரித்திருக்கச் செய்த நிலைமையைத் தோழி தலைவனிடங் கேட்டல். மருப்பும் பொருப்பு மருட்டிய கொங்கைமென் மங்கைமய னெருப்பும் விருப்பு நெகிழ்ந்தர சேமண நேரளவு மருப்புந் திருப்பதத் தான்ஷ்ம்சுத் தாசி னருட்கிரிவா - யிருப்பு மகமு மிசைந்ததெவ் வாறிசை யென்றனக்கே. (373) மன்றன் மனைவரு செவிலிக்கிகுளையன்புற வுணர்த்தல். (இ-ள்.) கலியான மனையில் வந்த செவிலிக்குப் பாங்கி இருவரது அன்பையும் பொருந்தக் கூறுதல். பொன்னகத் தாமரை போந்திருந் தானவன் போந்தவவன் றன்னகத் தாமரை சார்ந்திருந்த தாளிவள் சாற்றிலிது மின்னகத் தாமரை வேள்வும்சுத் தாசின் வியன்சிலம்பிற் பன்னகத் தாமரைப் பான்மொழி யேயுன்றன் பாக்கியமே. (374) பாங்கி யில்வாழ்க்கை நன்றென்று செவிலிக் குணர்த்தல். (இ-ள்.) தோழி தலைவியின் இல்வாழ்க்கை நல்லதென்று செவிலித்தாய்க்குக் கூறுதல். - - இல்லற மல்லது நல்லற மன்றென் றியம் புமந்தச் சொல்லற வாய்ந்தனை யேயுன்ற னாயிழை சூழ்ந்தெதிர்ந் தோர் மல்லற மாய்க்குமெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற் பல்லற மாற்றப் படர்தரு மாலது பாரகத்தே. (375) மண்மனை சென்றுவந்த செவிலி பொற்றொடிகற்பியன்ற்றாய்க்குணர்த்தல் (இ-ள்.) விவாகஞ்செய்யப்பட்ட வீட்டுக்குப்போய்ப் பார்த்துவந்த செவிலித்தாய் தலைவியின் கற்பியலை நற்றாய்க்குச்சொல்லல். 168