பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினமா நிதிநிகர் சேய்ஷம்சுத் தாசீன்செழுங் கிரிவாழ் கனமா ரிருங்குழற் கற்பிற் கினையெவர் காசினியி னினமா வருந்ததி யில்லையன் னாயென்று மின்றுமுற்ற மனமாந் தராசகம் வைத்தா லுயருமவ் வானளவே. (376) நன்மனை வாழ்க்கைத் தன்மையுணர்த்தல். (இ-ள்.) செவிலித்தாய் நற்றாய்க்குத் தலைமகளது நல்ல மனைவாழ்க்கைத் தன்மையைச் சொல்லுதல். அரவறித் தொல்கிய வல்குனல் லாய்மக ளாய்ந்தெளியோ ரிரவறிந் திந்து மினியன சொற்று மினம்புரந்தும் வரவறிந் தேற்று மதித்தன னல்லறம் வந்தெதிர்ந்தோ ருரவறிந் தோட்டுமிக் கோன்ஷம்சுத் தாசி னொளிர்கிரிக்கே. (377) செவிலி நற்றாய்க் கிருவர் காதலையுமறிவித்தல். (இ-ள்.) செவிலி நற்றாய்க் கிருவராசையையுங் கூறுதல். வன்மறந் தாழ்த்துமெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பர் சென்மறந் தாங்குளைத் தேசியந் தேரன்னை சென்றவந்த மன்மறந் தாலும் வழிமறந் தாலு மருவுமல்லி - னென்மறந் தாலு மறவா துறுமக ளில்லிடமே. (378) இவற்றுள்-தலைவன் றலைவிமுன் பாங்கியைப் புகழ்தலொன்றுங் கிழவோன் மகிழ்ச்சிக்கும், தலைவனைப் பாங்கி வாழ்த்தல்முதல் பாங்கி வாழ்க்கை நன்றென்று செவிலிக்குணர்த்தலீறாகியவாறனுள்பெருமகளுரைத்தலொன்றுங்கிழத்தி மகிழ்ச்சிக்கும், அல்லனவைந்தும் பாங்கி மகிழ்ச்சிக்கும், மணமனைச்சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியனற்றாய்க்குணர்த்தலாகிய மூன்றுஞ்செவிலி மகிழ்ச்சிக்கு முரியன. இல்வாழ்க்கை முற்றிற்று. பரத்தையிற் பிரிவு அஃதாவது தலைவன் பரத்தைமேற் காதலாய்த் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரியிற் போதல். அது வாயில்வேண்டல் வாயின் மறுத்தல் வாயினேர்வித்தல் வாயினேர்தல் என நால்வகைப்படும்; அவை-காதலன் பிரிவுழிக்கண்டோர் புலவிக்கேதுவிதா மவ்விறைவிக்கென்றல் முதல் புணர்ச்சியின் மகிழ்த வீறாகிய பத்தும் உணர்த்த வுணரு மூடலெனவும், வெள்ளணியணிந்து விடுத்துழிப் புள்ளனரி மாலைவே' லண்ணல் வாயில் வேண்டல் முதல் இணர்த்தார் மார்பனையிகழ்தலும் பிறவு மிறுதியாகிய அனைத்தும் உணர்த்த வுணரா ஆடலெனவு மிருவகைப்படும்; அவை வருமாறு: 169