பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலன் பிரிவுழிக்கண்டோர் புலவிக்கேதுவிதா மவ்விறைவிக்கென்றல். (இ-ள்.) தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரிக்குப் போதலைப் பார்த்தோர் இது ஊடலுக்குக் காரணமென்றுகூறல். எள்ளும் பிரிகில னென்றிக வாவன்ட ரின்றெழுந்து துள்ளு மறிவிழிச் சூளைமின் னார்முன்றி றோய்ந்துநின்றார் கொள்ளும் பெருந்தவக் கோன்ஷம்சுத் தாசின் கொழுங்கிரிவா - யுள்ளும் புலவிக் கிதுவல தில்லையவ் வொண்டொடிக்கே. (379) ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல். (இ-ன்.) பாங்கி தலைவியை நோக்கி நீயழுதுகொண் டிருத்தற்குக் காரண மென்னென்று வினாதல். குறையாப் பெருநலங் கூண்டளிப் பார்பக்கங் கூர்ந்திருந்து நிறையாப் பசியர்போ னின்றினைந் தாயென்று நேரலரைச் சிறையா விருத்துமெம் மான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பின் பிறையா ரிருதுதற் பெண்ணனங் கேயென்கொல் பேசுவையே. (380) இறைமகன் புறத்தொழுக் கிறைமகளுணர்த்தல். (இ-ள்.) தலைவன் தன்னிடத்தொழுகு மொழுக்கமின்றிப் பரத்தையரிடத் தொழுகுகின்றானென்று தலைவி பாங்கிக்குக் கூறுதல். புறத்தொழுக் கென்பதற்குப் பொருள். பரத்தையரிடத் தொழுகு மொழுக்கமென்று பொருள்கொண்டவா றென்னை யெனின் வடநூலார் புறமுரைப்பாமென்று கூறுவ ராதலாற் பரத்தையரென்னுஞ் சொற்குப் புறமுடையவரென்னும் பொருள்கூறிநின்றவாறுணர்க.புறமுடையரென்பதென்னையெனின் இவரின்ப மின்பமன்றென்று திருவள்ளுவர் வரைவின் மகளி ரென்னு மதிகாரத்தில் இன்பத்திற்குப் புறம் இவரின்பமென்று கூறியவாற்றானுணர்க. "இருமனப் பெண்டிரும்' என்னும் திருக்குறளானு முணர்க. - வானா ரமுத வகைவிடுத் தோடி மலிந்தநஞ்சந் தானார் பவரிற் றவித்தலைந் தார்பரத் தையலரு ரானா தமர்புக ழோன்ஷம்சுத் தாசீ னருஞ்சிலம்பிற் - கானார் மலர்க்குழற் கன்னிநல் லாய்நந்தங் காவலரே. /38/ノ தலைவியைப் பாங்கி கழறல். (இ-ஸ்.) தலைவிக்குப் பாங்கி புத்தி கூறுதல். மனையறம் பேணி மகிழ்நர்சொற் காத்து மகிழ்வதல்லாற் பினையற மேதனங் கேயுணர் வாயெதிர் பேணலர்தம் 170