பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவுணர் பாங்கி தலைவிக்குணர்த்தல். (இ-ஸ்.) தலைவன் வரவுணர்ந்த பாங்கி தலைவனை யெதிர்கொள்ளத் தலைவிக்குச்சொல்லுதல். உள்ள துனைமுன் னொறுத்தகன் றார்பின்ன ருள்ளியுள்ள மெள்ளா தடைந்தன ரிற்கடை யேற்றவர்க் கென்றுமின்மை கொள்ளா தளிக்குமென் கோன்ஷம்சுத் தாசின் குளிர்வரைவாய்த் தள்ளா தழைப்பதன் றோதன்ம முங்கற்புந் தாழ்குழலே. (386) தலைவனைத் தலைவியெதிர்கொண்டுபணிதல். (இ-ஸ்.) தலைவனைத்தலைவியெதிர்சென்று வணங்குதல். முனையுங் கடகரிக் கோன்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவாய் நனையு மிருவிழி நீர்விடுத் துன்பத நான்பணிதற் கெனையும் பொருளென வெண்ணியின் றுன்னை யிவண்விடுமங் கனையும்பல் லாண்டுபல் லாண்டுயிர் வாழியென் காவலனே (387) புணர்ச்சியின் மகிழ்தல். (இ-ள்.) வெளி. - வானா ரமிழ்தும் வகையில தேலவர் மன்னியொன்றாய்த் தானா ரமிழ்தத் தனிநிலைக் கென்றுமித் தாரணிக்கோர் கோனா யமர்பெரு மான்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய் நானா யெடுத்து நவில்வதென் னோவிந்த நானிலத்தே. (388) இப்புத்துத் துறைகளும் உணர்த்தவுணரு மூடற்குரியன. வெள்ளணியணிந்து விடுத்துழித்தலைமகன் வாயில்வேண்டல். (இ-ள்.) தலைவி புதல்வனைப் பயந்து நெய்யாடிய செய்திக்கு அடையாளமாக வெள்ளிய ஆபரணமுதலியன வணிந்து சேடியைத்தலைவனிடத்துச் செவிலித் தாயர் விடுக்க, வந்த தோழியைத் தலைவன்துதாக வேண்டிக் கூறுதல். வெண்டா மரைமகள் போலுநல் வெள்ளணி வேய்ந்துவிண்ணி . னொண்டா ரகையென வுற்றமின் னேயென்று மொன்னலரைத் துண்டா விழுத்துமிக் கோன்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்த் தொண்டாக் கொளவெனைச் சொல்பவ ராரந்தத் துரமொழிக்கே. (389) 臀 தலைவி நெய்யாடிய திகுளைசாற்றல். so (இஸ்.)தலைவி.புதல்வனைப்பெற்றுநெய்யாடியதனைப் பாங்கிதலைவனுக்குச் 172