பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயின் மறுக்கப்பட்ட பாணன் கூறல். (இ-ள்.) வெளி. அல்லெறி வார்குழ லன்னமன் னாயெதிர்ந் தார்தளத்தின் மல்லெறி வாகையர் கோன்ஷம்சுத் தாசீன் மலையவெற்ப ரெல்லறி வாட்கையெம் மான்பெய ரோதி னிசைந்தபச்சைக் கல்லெறி வார்கருங் கல்லெறிந் தாயின்று காய்ந்துநின்றே. (395) விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண்டிறையோன் மகிழ்தல். (இ-ள்.) வெளி. - துன்பிற் கடைபடு மின்பமென் பாரந்தச் சூழ்ச்சியைக்கண் முன்பிற் றெரிப்ப விருந்தோன் வந்தது மூவுலகு மன்பிற் பரவுநல் லோன்ஷம்சுத் தாசீ னருட்கிரிவாய்த் தென்பிற் பொலிந்தன னின்றினி யென்றும்புன் றிவினையே. (396) விருந்துகண் டொளித்த ஆடல் வெளிப்பட நோக்கிச் - சீறே லென்றவள் சீறடி தொழுதல். (இ-ள்.) வெளி. எல்லா மறிந்த வியல்பின ருங்குறை யேற்றொருகாற் பொல்லா விதிவழிப் புக்கில ரோசெயம் பூண்டபுய மல்லா லுலகளிப் போன்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி னல்லாய் பொறுப்பாய் பணிந்தே னினதடி நாண்மலரே. (397) இஃதெங்கையர் காணி னன்றென்றல். (இ-ஸ். எம் தங்கைமாராகிய பரத்தையர் கண்டால் நீர்செய்த பணிவு குற்றமாமென்று தலைவனுக்குத் தலைவி கூறுதல். கோலா கலப்பெரு மான்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய் மாலா கினைபோன் மயக்கினை யிதந்த மான்மருட்டுஞ் சேலா ரயில்விழிச் சேயிழை பெங்கையர் தேரிலுன்னைக் காலா லுதைத்துக் கனலுவர் நாளைக் கலங்குவையே. (398) அங்கவர் யாரையுமறியே னென்றல். (இ-ள்.) அப்பரத்தையர் யாரையுந் தெரியேனென்று தலைவன் தலைவிக்குக் கூறுதல். - பழுக்கு மமுதப் படர்சுவை யுண்டவர் பாரிலதைக் கொழுக்கும் படிவிடுத் துண்பர்கொல் லோவிடங் கூண்டெழுந்து 174