பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதலின், எத் திறத்தவரே யாயினும் தமிழர்கள் மொழியுணர்வால் ஒத்திருந்தாரானால், தமிழின்பம் நுகருதற்கு தடை ஏதும் இல்லை என்பதே உண்மை நிலை ஆகும். கோவை நூல் பதிப்பித்தல் மேலப்பாளையம் வித்வான் வ. அ. மல்க்கான் அலி சாகிபவர்கள் இயற்றிய அரும்பதவுரையோடு கூடிய ஷம்சுத்தாசீன் கோவை நூல், ஷம்சுத் தாசீனவர்களின் மக்களாகிய எம் தந்தையரின் முயற்சியின் பேரில், எங்களது வணிக நிறுவனங்களின் அந்நாளைய ஜெனரல் மேனேஜரும், முஸ்லீம் அஸோஸியேஷன் டைரக்டரும், பன்னூலாசிரியரும், தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஒருங்கே சிறந்த புலமையும் நாவன்மையும் மிக்கவரும், 'நூருல் ஹக் மாத இதழின் ஆசிரியரும், பாவலரவர்களின் அணுக்கத் தோழருமாகவும் விளங்கிய மதுரை மகா வித்வான் ம.கா.மு. காதிறு முகியித்தீன் மரைக்காயர் (இவர் இக்கோவை நூலுக்குச் சாற்றுக் கவியும் வழங்கியுள்ளார்) அவர்களைக் கொண்டு கி.பி. 1919 ஆம் ஆண்டு சென்னை பூரீ.பத்மநாப விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. திருப்பாடற் றிரட்டு 2-ம் பதிப்பு * தவமிலங்கிய நபிகனாயகர் சபையி லேகு நற் றகையர்,** மா மேவு கோட்டாற்றில் மன்னுயர் மெய்ஞ்ஞான வள்ளலான ஞானியார் அவர்களின் பரம்பரையில் வந்த மெளலவி ஞானியார் ஷெய்கு முஹியித்தின் ஆலிம் சாகிபு அவர்கள் முயற்சியாலும் வ. செ.த. ஷம்ஸ் தாளபீனவர்களின் பொருளுதவியைக் கொண்டும் 'மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு ' இரண்டாம் பதிப்பிற்கான பணி ஹிஜிரி1355 (1936) ஆம் ஆண்டிலே சென்னை கேசரி அச்சுக் கூடத்தில் மேற்கொள்ளப் பட்டு பதிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் எமது பாட்டனார் காலஞ் சென்று விடவே, எம் தந்தையரின் ஒத்துழைப்போடு கி.பி. 1937-ஆம் ஆண்டு (ஹிஜிரி 1356) ஏப்ரல் மாதத்தில் பாடல் பதிப்புப் பணி இனிதே நிறைவுற்று நூல் வெளியிடப்பட்டது.

  • 'மெய்ஞ் ஞானத் திருப்பாடற்றிரட்டு'(2-ம் பதிப்பு), முகப்புப் பக்கமும் பதிப்புரையும் ** "மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு", சரித்திரச் சுருக்கம் பக்- 4.

1 6