பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிழை மைந்தனு மாற்றாமையுமே வாயில்களாக வரவெதிர்கோடல். (இ-ஸ்.) தலைவன் பரத்தையர் சேரிக்குத் தேரின்மேலேறிப்போம் போது தெரிந்தெடுத்த ஆபரணங்களையணிந்த புதல்வ னெதிரேநிற்ப அப்புதல்வனைத் தழுவி யெடுத்துக் கொண்டு தலைவனாற்றான்.மயுடன் வந்த இடத்துப் புதல்வனுந் தலைவனாற்றாமையுந் தூதுகளாகத் தலைவி தலைவனை யெதிர்கொள்ளல். - சொல்லரும் வெம்பசி சூழ்ந்துலைந் தாலுந் துணிந்துபுலி புல்லருந் தாதது போற்புன லூர பொதுமகள்பாற் றொல்லருஞ் சீர்த்தியங் கோன்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய் வெல்லருங் காமம் விளைவதுண் டோவற்ற மேலவரே. (404) மணந்தவன் போயபின் வந்த பாங்கியோ டிணங்கிய மைந்தனை இனிதிற் புகழ்தல். (இ-ள்.) வெளி - - கார்வர வென்றகை யோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற் போர்வர வென்ற புனற்பெரு மூரர் பொதுமகள்வா ழுர்வர மீட்டென் னொருமனைக் கேயவ ருற்றபெருந் தேர்வரச் செய்த சிறுமகன் வாழியென் றேமொழியே. (405) தலைவி தலைவனைப் புகழ்தல். (இ-ள்.) வெளி ஆவிக்கு மாவி யெனவுவந் தேற்றநம் மன்பரன்றிப் பாவிக்குங் கேளிர்மற் றில்லைகண் டாயுற்ற பாரனைத்துஞ் சேவிக்கும் பூபர்பி ரான்ஷம்சுத் தாசீன் சிலம்பினம்மைச் சிவிக்குங் காதலன் னாயன்று போலின்றுந் தேர்ந்தனனே. (406) சிலைநுதற் பாங்கி தலைவியைப் புகழ்தல். (இ-ள்.) வெளி. கலைக்கணி யாக்கிய வேள்டிைம்கத் தாசீன் கனகவெற்பில் விலைக்கணி யாக்கிய மெய்யொடு வாயிதழ் மேவுமின்னார் முலைக்கணி யாக்கிய மொய்ம்புடைத் தோளண்ணன் முண்டகத்தா டலைக்கணி யாக்கிய தையனல் லாள்கற்புச் சாற்றரிதே. (407) ஆபிழை மைந்தனு மாற்றாமையும் வாயில்களாகப் வரவெதிர் கோடல்முதற் சிலைதுதற்பாங்கி தலைவனைப் புகழ்தலீறாகிய இவ்வைந்து துறைகளும் மேற்கூறிய 176