பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துதிற்பிரிவு - -. அஃதாவது இரண்டரசர் தம்மிற் பொருகின்ற விடத்து அவரைச் சமாதானஞ் செய்வித்தற்குப் பிரியும் பிரிவு. அரசரைச் சமாதானஞ் செய்வித்தற்குப் பிரியும் பிரிவெனின், தூதுவராவார்பிறர்க்குப்பணிசெய்து வ்ாழ்வார்; அவரொப்பில்லாராவா ரென்பதென்னையெனின் இரண்டரசரும் நாளைப் பொருவோமென்று முரண் கொண்டிருந்த நிலைமைக்கண்தானருளரசனாதலின்மக்களும் விலங்குகளும் பல பட்ல் சகியாது இப்போரை யொழிப்பேனென்று, இருவரையு மிரந்து சமாதானஞ் செய்வித்தலாலென்க. அன்றி, தேவரு மசுரரும் பொருதகாலத்துத் தேவரையு மசுரரையு மிகைசெய்தாரை யானொறுப்பலென்று பாண்டியன் மா கீர்த்தி சமாதானஞ் செய்வித்ததுபோல இவரையு மிகைசெய்தாரை யொறுப்பலென்று தூதாகச் செல்லுதலென்றலு மொன்று. - துதிற்குப்பிரிவு தலைமகன்றன்னாலுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல். (இஸ்.) தலைவன்தூதின்பொருட்டுப்பிரிதலை அத்தலைவனாலறிந்த பாங்கி தலைவிக்குக் கூறுதல். வஞ்சினங் காட்டி மலையு மிருபெரு மன்னரமர்க் கஞ்சின ராயின் றகன்றனர் கானடங்காவரசர் தஞ்சினம் வாங்குமிக் கோன்ஷம்சுத் தாசீன் றடத்திறையென் னஞ்சின வேல்விழி யாய்நடு நின்றற நாட்டுதற்கே. - (4/4) தலைமகண்முன்பனிப் பருவங்கண்டு வருந்தில். (இ-ஸ்.) வெளி. . . குனிக்கும் வரிசிலைக் கொற்றவர் சீற்றங் குலைப்பதற்கென் றினிக்கு மொருபெருந் துரதெனப் போந்த விறைவரென்றஞ் சனிக்கும் பெரும்புக ழோன்ஷம்சுத் தாசீன் றடத்திருகட் பனிக்கும் பனிக்கும் பரிந்தில ரேயென்ன பாதகரே. (4/5) தோழி யாற்றுவித்தல். (இ-ஸ்.) வெளி. . போற்றுங் கருங்குழற் பூங்கொடி யேமகிழ் போந்தனர்கூர்ந்: தாற்றும் பெருந்தவத் தோன்ஷம்சுத் தாசீனருட்கிரிவாய்த் துாற்றுங் கொடும்பனி கண்டுன துள்ளத் துயரனைத்து மாற்றும் படித்திருத் துரதெனப் போந்தநம் மன்னவரே. . (4/6)

  • , துதிற்பிரிவு முற்றிற்று.