பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவயிற்பிரிவு அஃதாவது-நட்பாகிய அரசனுக்குப் பகையரசரிடையூறுற்ற வழி, அது தீர்த்தற்குத் தலைவன் றுணையாகப் பிரிதல். தன்னுழை யரி லொருவனைப் படைகூட்டிப் செல்லவிடாது தான் போதல் வேண்டு மென்பதென்னை யெனின்? நட்பு மிகையால் தானே யவனாயிருத்தலின் அவன் கருமந்தன்கருமமாக வெண்ணி விரைவினெழுந்து அப்பகை தீர்க்கத் தானே போனானெனக் கொள்க. துணைவயிற் பிரிவு தலைமகன்றன்னாலுணர்ந்த - தோழி தலைமகட்குணர்த்தல். • . (இ-ள்.) வெளி. * . உற்றவர் போருக் குறுதுணை யாயெதிருற்றவரைச் செற்றவர் சின்னஞ் சிதைத்திடச் சென்றனர் சீர்த்தகுண நற்றவர் சொற்றபி ரான்ஷம்சுத் தாசி னளிர் தடத்துன் கொற்றவர் மாழ்கல் குறுகுவர் நாளைக் குலக்கொடியே. தலைமகன் பின்பனிப்பருவங் கண்டு வருந்தல். (இ-ஸ்.) வெளி. நட்டார்க் குதவ நயந்துசென் றாரெமை நாடலர்விண் கொட்டா விருக்குமிப் பின்பணிப் போழ்துங் குறித்திலர்பூங் கட்டார் புரள்புயத் தோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்பின் மட்டா யழுங்கி வருந்துதற் கேவிதி வாய்த்ததுவே. தோழி யாற்றுவித்தல். (இ-ஸ்.) வெளி. - வாடி யழுங்கி மயங்கன்மின் GಣTLGಶTUಗೆ வந்தனரிங் கோடி யரசர்க் குறுதுணை யிந்தடைந் தோர்க்கொளிர்பொன் கோடி யெனக்கொடுப் போன்ஷம்சுத் தாசீன் குலவரைவாய்ச் சூடி யலைந்த துணிமணி யாவுந் துலக்குதற்கே. . துணைவயிற்பிரிவு முற்றிற்று. பொருள்வயிற்பிரிவு . . . (4/7) (4/6) (41%) அஃதாவது-பொருளிட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு. ஆயின், முன் பொருளிலனாம், ஆகவே, "எள்ளுநர்ப்பணித்தலுமிரந்தோர்க்கீதலு, நள்ளுநர்நாட்டலு 18O