பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயவா ரொறுத்தலும் என்னுமிவை யெல்லாம் பொருட் குறை பாடுடையார்க்கு நிகழாமையின், இக்குறைபா டெல்லாமுடையனாம்; அவையுடையானது ஒப்பின்மை யென்னையோவெனின் பொருளில்லா தவனாய்ப் பிரியுமென்ப கன்று. தன்முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்டபொருள்களெல்லாவற்றையுங் கொண்டு பயன்றுய்ப்பது ஆண்மைத்தன்மையன்றெனத் தனது தாளாற்றலாம் படைத்த பொருள்கொண்டு வழங்கி வாழ்தற் பொருட்டென்க: இஃதன்றித் தனது முயற்சியாற் கிடைத்த பொருள் கொண்டு செய்த கருமங்கள்தனக்கே பயன்படும் பொருட்டு மாம். பொருள்வயிற்பிரிந்ததலைமகன்நன்னாலுணர்ந்த தோழிதலைமகட்குணர்த்தல். (இ-ள்.) வெளி. பெருமையுந் கீர்த்தியு மின்பமும் வாழ்வும் பெருக்கிவரு மொருமையுந் தாங்கு மெனவகன் றார்பொருட் குற்றகுணத் தருமையு மன்புமுள் ளோன்ஷம்சுத் தாசீனருட்கிரிவா யிருமையுஞ் சீர்த்த வியலணங் கேநந்த மேந்தலரே. (420) தலைவியிளவேனிற் பருவங் கண்டு வருந்தல். (இ-ள்.) வெளி. . . . . . மாசையிற் பூத்த மணிமுலை வேனிலும் வந்தகுயி லோசையிற் கூய வுறுதுயர் காண்கில ருற்றதவப் பூசையிற் சீர்த்தபு மான்ஷம்சுத் தாசீன் பொருப்பனையா யாசையி லாசையுற் றார்க்குள வோமற்ற வாசைகளே. (42/) - தோழியாற்றுவித்தல். (இ-ஸ்.) வெளி. * . மங்கைக் கரசெனு மாமயி லேயுன்றன் வார்தனப்பொற் கொங்கைக் கிசைந்த கொழுநர்வந் தாரெதிர் கொண்டலெட்டுஞ் செங்கைக் கொடையுடை யான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற் றங்கைப் பொருள்கொடு வேண்டுவ நாளுந் தருவதற்கே. (422) பொருள்வயிற்பிரிவு முற்றிற்று. தலைமகன்றலைமகளது உருவெளிப்படக்கண்டுள்ளே வியத்தல். (இ- ள்.) கல்வி வயிற் பிரிவு முதலாய ஐந்தினுள்ளும் தூது முதலியவுங் காரணமாகிய பிரிவின்கண்அவ்வினையோராண்டின்கண்முடியாது நீட்டுத்துழி தலைமகன் தலைமகளது உருவு வெளிப்பாடுகண்டு சொல்லுதல். 181