பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பும் பிறையுஞ் சிலையும் புயலு மமையுமம்புங் கரும்புங் குமிழுங் கதலியு மாலுங் கமலமுநான் . விரும்பும் பெருங்குண வேள்வடிம்சுத் தாசீன் வியன்சிலம்பிற் . றிரும்புத் திசைமுழு தெங்கணு மோடித் திரிகின்றனவே. - (423) . .” பாசறைமுற்றி மீண்டுர்வயின்வந்த தலைவன் - பாங்கற்குப் பணிவெடு மொழிதல், (இ-ள். படைவீடு காரணமாகச்சென்று மீண்டு ஊர்வந்த தலைவன் விரைந்து தேர்செலுத்திய சாரதியை மகிழ்ந்து கூறுதல். - சினத்தினும் போரினுஞ் சீர்த்தெதிர்ந் தாரைச் செகுத்தெழுதேர் வனத்தினுங் கானினு மன்னதம் மூர்வல வாதனத்தோ டினத்தினு மிக்கபு மான்ஷம்சுத் தாசீனிருஞ்சிலம்பின் மனத்தினும் வேக மெனவடுத் தாயிது மாவியப்பே. (424) தலைமகளோடு கலந்துறந் தலைம்கன்கார்பருவங்கண்டு களித்தியம்பல். (இ-ன்.) தலைவியோடு கலந்துற்றதலைவன்கார்காலங்கண்டு மகிழ்ந்து கூறுதல். செய்யா ளெனவருந் தேவியு நானுஞ் செகதலத்தோர் மெய்யா ருயிரென மேவிக் கலந்தன மேலுமின்றும் பொய்யா வரத்துர வோன்ஷம்சுத் தாசீன் பொருப்பிலவன் - கையாய்ப் பொழிபொழி மாதமும் மாரி கனமழையே. (425) . r கற்பியல் முற்றுப்பெற்றது. ஷம்சுத்தாசீன் கோவை முற்றிற்று. ஆமீன் 182