பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்முடியில் நன்மணிகள் ஷம்சுத்தாசீனவர்கள் ஏற்றிருந்த பதவிகளும் பெற்றிருந்த சிறப்பு களுமாவன:- - மேலப்பாளையம்V.S.T. தமுஸ்தாசிம் தரகனார்ஹாமீம் பள்ளி மதரஸா வின் அக்தார் மற்றும் இனாம்தார்; தயாள குண சீலர் தரும குண வள்ளல்; வெகு ஜன உபகாரி, V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் அண்ட் கம்பெனிகளின் புரொப்ரைட்டர்; வெகு காலமாக முனிசிபல் கவுன்சிலர்: கேப் காமரின் ஜெனரல் டிராபிக் கம்பெனி லிமிடெட் ஸ்தாபகர், செக்ரட்டேரி மற்றும் டிரஷரர்; மேலப்பாளையம் முஸ்லிம் அஸோஸியேஷன் ஸ்தாபகர், போஷகர் மற்றும் மெம்பர்; ஆனரேரி மேஜிஸ்ட்ரேட், தென் இந்தியா பாங்க் பிரஸிடெண்ட்; ரெங்கூன் சோலியா முஸ்லிம் அஸோசியேஷன் முத்தவல்லி, டெல்லி தர்பார் மெடலும், சாஹிப் பஹதூர் பட்டமும் பெற்றவர். 'இயற்கை எய்துதல் குடும்பத்தினர், உறவினர், சுற்றத்தினர் மற்றும் நட்பினரால் பங்களா அப்பா எனவும் ஏனையோரால் தம்தாஸ்' எனவும் அன்புடன் நினைவு கூறப்படும் ஷம்சுத்தாசீனவர்கள் மேலப்பாளையம் மீதிலொரு குறுநில மன்னரெனவே சிறப்புற்றிருந்தாலும் 'முத்தர் மனமிருக்கு மோனத்தே' என்பதற்கிணங்க மெய்ப் பொருள் தேட்டத்திலேயே தமது சிந்தையைச் செலுத்தியவராய் பற்றற்றிருந்து வந்தார். தமக்கு மரணம் அடுத்ததையுணர்ந்து தமது இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கென்று ஏழாயிரம் ரூபாயைத் தமது தனயரிடம் தந்து 'பிரைவேட்டாக வைத்துக் கொள். தருணம் வரும்' எனச் சொல்லிப் பின்னர் ஐந்து நாட்கள் வரை மெளன முற்றிருந்து, ஆயிரம் பிறை கண்ட வாழ்வினராய்த் தமது தொண்ணுற்றிரண்டாவது வயதில் தமிழாண்டு 1112-ல் புரட்டாசித் திங்கள் 12-ஆம் நாள் ரஜப் 10 ஹிஜிரி 135 (27-9-1936) ஞாயிற்றுக் கிழமையன்று பகல் 1-45 மணியளவில் தாம் வழக்கமாக உச்சரித்து வந்திருந்த இறைவன் திருப்பெயராகிய 'ஹக்' (மெய்ப்பொருள்) என்பதனை உறுதியுடனும் உற்சாகமாயும் மொழிந்தவராக தம் இல்லத்தில் வைத்து இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு, ஹாமீம்புரம் சமவெளியில் வைத்து நூற்றுக்கணக்கான அணிவகுப்புகளாக நின்று தொழ வைத்து, பின்னர் ஹாமீம் பள்ளி, மதரஸா மத்தியில் தமது 17