பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிய வத்திரத்தையும், விளக்கி விளங்கச்செய்து, இரு நாகமும் - இரண்டு மலையையொத்த களும், ஒருநாகமும் ஒப்பற்ற பெட்டையானையும், கொங்கை அன்னமும் - அன்னப்பறவையும், காணுற வெட் கும்படி. எச்சோகமும், எவ்விதத் துன்பத்தையும், தீர்த்து நீக்கி, சுடர் பிரகாசத்தையுடைய. ஆகமும் - தேகமும். ஒல்க-குழையும்படி அசைந்துறும் அசைந்து செல்லு வாள், ஆல்-அசை. நந்தம் - நம்முடைய, ஆர்உயிர் அரிய உயிர் போன்ற தலைவி. - 30. முறை முறை - வரிசை வரிசையாக, உள்- மனது, முதிரும் அதிகரிக்கா நிற்கும், அச்சந் தன்னோடு - பயத்தோடு, வேர்ப்பும் . வேர்வையும், தளர்வும் - சோர்வும், பேர் அன்பும் பெரிய அன்பும், மன்னர்மன்னொடு ' -இராஜாதி ராஜனோடு, மால்-மாலை, வலவ -தேர்ப்பாகனே, பொன்னொடு -பொன்னாற் செய்யப்பட்ட பலவகை ஆபரணங்களோடு. 31. மெய்யோடு இரண்டு- மெய் யும் வாக்கும் மனமும், மை - மேகம், கணமதி - உடுக்களாற் சூழப்பட்ட சந்திரன், அமர் - புத்தம். கனகம் - பொன், புணர்ந்தது . தழுவியது. 32. மயனோய் மையலாகிய பிணி, ஒர்ந்து அறிந்து இருத்தி இருப்பாய், இனையேல் வருந் தேல், விழிவண்டு - கண்களாகிய வண்டு. அருத்தி - ஆசை, முகதாமரை - முகமாகிய கமலம், ஒளித்தது - மறைந்தது. 33. வட்டு - சூதாடு கருவி, அலர் மலர்ச்சி, நிந்தை. போது - மலர், கொம்பு - தந்தம், வெற்பு - மலை, சிறை - சிறகுகள், காவல். புள் - சக்கர வாளப் பறவை, துடி உடுக்கை, தோற்றுறும் - தோற்றா நிற்கும், தோற்றுப்போகும். 34. மின்னை மின்னலையொத்த தலைவியை, திரஆவியை அழியாத உயிரை, சம்பன்னரய் குறைவற்ற வராய், சசி . இந்திராணி. 35. படி - பூமி, முடி - கூந்தல், இந்து - சந்திரன், வெகுண்டிடும் - கோபியாநிற்கும். 36. இன் - இனிமை, இயல்பு இயற்கை, அழகிய, தோகை யின் மயிலையொத்த, தெய்வம் - விதி, முந்துதும் வண் முற்படச்செல்லுவோம். 37. சுகிர்தம் - இன்பம், நூறா - கெடாத, மணிவிளக்கு - இரத்தின தீபம், நுண் - நுண்ணிய, தேறார். பகைவர். 38. அன்ன போல, கலந்த தழுவிய, இரும் பெரிய, இயம்பரிது - சொல்ல (էքւգ-Ասո51, 39. குடை - கவிகை, கோல் - செங்கோல், தொடை - மாலை, கோதை - கூந்தல், உலைவாய் - உலைந்து, உலையினிடத்து. கடை பட்டு - கடையப்பட்டு, கடையாய். செம்புனல் இரத்தம். முடை - புலால் நாற்றம். கணை - அம்பு. 40. நகை - பல், நெய் ஊன், நிணம் - கொழுப்பு, இலை தகட்டு வடிவம், சிகரம் கொடுமுடி, ஆயம் மகளிர்கூட்டம். 41. வாவி - தடாகம், காவி - நீலம், மாதலம் பெரிய பூமி, சஞ்சீவி உயிர்தரு மருந்து, சிமையம் - மலை, வெஞ்சிகி - வெவ்விய அக்கினி, ஆவியின் ஆவி, உயிர்க்குயிர். 42. நீடாழி - நீண்ட சமுத்திரம், வையம். பூமி, நிலாப் பகல் - சந்திர சூரியர், ஒள் - ஒள்ளிய ஒருத்தல் - யானை, வாடா மெலியாத, ஆறு விதம். - 43. நீதம் - நியாயம், ஏதம் குற்றம். காமனுற்று - மன்மதன் வந்து, சோலையிற் பொருந்தி, காவலைப் பெற்று. 188