பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எய்தருமென்போதஞ்சரிய - பொருத்திய மரங் களானவை மெல்லிய புஷ்பங்களோடுசாய, எய்கின்ற மெல்லிய புஷ்பப்பாணமாகிய ஐந்தும் எய்தற்கு அருமையான எனது அறிவானது நழுவ. பொறி அளி என்னை அறுக்க, பொறிகளையுடைய வண்டு, ஐம்பொறிகளும் அன்பும். தந்த வாதங்கடுப்ப - கொம்பினது விரோதம் அங்கு நெருங்க, அவன் இரதமாகத் தந்த தென்றற் காற்றானது என்னைக் கோபிக்க. மலிந்த புலன் - மலிந்த வயற்களை, மிகுந்த எனது அறிவை. துர்த்தது - அழித்தது, ஒர் மாதங்கம் ஒப்பற்ற ஒரு யானை, பெருமை பொருந்தியதங்கத்தை ஒத்த ஒர்தலைவி- ஒரு பெண்ணினதுசாம். 44. கலைகண் முழுது - சாஸ்திரங் கள் எல்லாவற்றையும், மானை யொத்த விழி முழுவதையும், ஆய்ந்து தெரிந்து, அளகை அளகாபுரி, மன்-குபேரன், புரையும் ஒத்த, மெய் பூணலம் - சர்த்தினிடத்துப்பூண்டஅழகைபுரவல-அரசனே, பெண்பேதைக்கு-பெண்ணாகியபேதைக்கு. உண்மையான இன்பத்தை. 45. மாட்சி - மாண்பு, கொங்கை தனம், வதனம் - முகம், ஐம்பால் கூந்தல், பால நிலவு, நெற்றியாகிய சந்திரன். 46. காரை - மேகத்தை, தருவை - பஞ்ச தருக்களை, ஒன்னாரை பகை வரை, இடைச்சீரை மருங்குலினது சிறப்பை. - அழிந்தாய், கோரையென்னும் புல், மாய்த்தெனும் உடைந்தாய் கோரை - மாய்த்ததென்று சொல்லும். 47. துங்கம் - பரிசுத்தம், கடுத்து ஒத்து, தையல் பெண், வெம் வெவ்விய, உரத்து - மார்பினிடத்து, புங்கம் - பானம், பொன்றும்கெடா நிற்கும். 48. முத்துண்டு - முத்தினாற் செய்யப்பட்ட ஆபரணங்களைத் தாங்கி, விழிவேல் - எத்துண்டு பொருந்தி, கண்களாகிய வேல், குத்துண்டு குத்துப்பட்டு, முலைக் கோடுண்டு முலையாகிய கொம் பானது ஏறுண்டு, மையற் பித்துண்டு மையலாகிய பயித்தியம் பிடித்து, அழிந்தனன் - கெட்டனன், பேருலகு பெரிய உலகம். 49. கலகம் - விரோதம், கட்கடை - கடைக்கண், சிமயம் - கொடிமுடி, ஒத்திடற்கு -ஒப்ப வைப்பதற்கு. 50. வானகம் ஆகாயம், மகிதலம் பூமி, அந்தத்தலைவிக்கு, ஆனகம் - தேவ தரு, கானம் - காடு இயல் அம்மான்றனக்கு; இலக்கணம், கழறு சொல். á புயல் மேகம், அம்புயம் - தாமரை, கயல். கெண்டைமீன், முக்கணி- வாழைபலா மாஇவற்றின் கனிகள். கைக்களிறு துதிக்கை யுடைய யானை, மயல் ஆசை, இயல் இலக்கணம், ஆர்வல பாங்கனே, மாழை, பொன், பெயல் பொழிதல், வனம் சோலை. 52. திரு கொற்றவை, மரு வாசனை, பொரு பொருதுகின்ற புலன் - அறிவு, ஆசையை ஆசைக் குரிய தலைவியை, போந்து - போய், 53. முலைப்பகை - தாமரை யரும்பு, மொழிப்பகை தேன், அக்கக்கொலைப்பகை - நீலம், தறை - வாசனை, உம்பல் - யானை, கல் - மலை. காரிகை தலைவி. - 54. வான் - மேகம், முடி கூந்தல். வடி - வடித்த, வரை மூங்கில், மதி-சந்திரன், உடல் -பொன், தளிர்-குளிர்ச்சி, தாழ்குழல் தாழ்ந்த கூந்தலையுடைய தலைவி. . 55. தாவுண்டு தாவி, பரி - குதிரை, தமிழ்வரை பொதியமலை, மேவுண்டு மேவி, வின்னுதல் - வில்லைப் போன்ற நெற்றி, நோக்கு ஏவுண்டு பாணமானது தைத்து, இணைவுண்டு வருந்தி, ஏந்தல் - தலைவன், நோவுண்டு துன்பப்பட்டு, நுவன்ற சொல்லிய. நொய்யறிவு சிற்றறிவு. கண், 189