பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளிப்போன் - காப்பவனான. தடத்தகத்துமலை யினிடத்து. 85. கண்டு - கற்கண்டு. கனி - கனிந்த, கற்பகம் - தேவதரு. இருநிதி - சங்கநிதி பதுமநிதி. குறுகலர் - பகைவர். நாற்றண்டு - நான்கு வகைச் சேனை. தொண்டு - ஏவற்றொழில், தோத்திரம் துதி. 86. புனம்-தினைக்கொல்லை. புவனம் - பூமி. பெர்துவற பொது மை நீங்க. கனம் - பெருமை. கருதலர்- பகைவர். வனம் காடு. இனம் - இன்னம். அறிதி - அறிவாய். இயைபிலர்-பொருத்த மில்லார். 87. சிப்பி - கிளிஞ்சில். சேற்றினிடத்து. மரை - தாமரை. ஒப்பி சேற்றுள் - சம்மதித்து. ஏற்கிலர் - கொள்ளாதவர். ககன் - ஆகாயம். மாதவம் - பெரிய புண்ணியம். அப்பிய அணிந்த நன்னலம் - நல்ல அழகு. குலம் - சாதி. ஆயிழைக்கு - ஆராய்ந்தெடுத்த ஆபரணங்களையுடைய பெண்களுக்கு. 88. பொழில் - சோலை. கழங்கு கழற்சி. ஊசல்-ஊஞ்சல். அலர்- மலர். எழில்-அழகு. அம்மனை - அம்மானை. பயிலுநர் பழகுவோர். மதமாரி - மதமாகிய மழை. முனையும் பொருதாநிற்கும். கடம் கதுப்பு, தார் - மாலை, 89. மருளும் வெருளும். பிணை விழி . மான்போலுங்கண். குஞ்சரமுலை - யானைக் கொம்பைப் போன்ற முவை. குமுதம் அல்லி மலர். புயல் குழல் மேகம் போன்ற கூந்தல், ஏதில் களங்கமற்ற. அருளும் - கொடுக்கும். தெருள்-அறிவு. பொலிவு அழகு. சேயிழை செம்மையான ஆபரணத்தைத் தரித்த பாங்கியே. தேமொழிக்கு தேன் போலும் வார்த்தையை யுடைய தலைவிக்கு. 90. அவதரித்து- பிறந்து. அருந்தவத்தின்அரிய புண்ணியத்தின் செறிவு - நெருக்கம். முறி வேதர தோற்கும்படி. பிறிவு - வேற்றுமை. 91. சொன்னம் பொன். சுகம் - இன்பம். சின்னம் அடையாளம். பின்னம் - பழுது, கைப்பிடிபடும் - நடையால் துதிக்கையையுடைய பெட்டை யானையுந் தோற்றுப் போகும். ஓர் அன்னம் ஒப்பற்ற அன்னப்பறவைபோலுந்தலைவி. அமையுங் கொல் - பொருந்துமா. - 92. வாய்த்துளது - சித்தித் திருக்கின்றது. நாயேன் - நாயையொத்த யான். நற்றமிழ் - நல்ல தமிழ். தனி ஒப்பற்ற. 93. செயலால் - செய்கையினால், சிமயம் -மலை, கயல்-கெண்டைமீன். கடு - நஞ்சு. பாய்ந்து ஒடி. கனல் - தீ. பெருங்காற்று. - 94.பாரார்.உலகத்தார். பழிச்சும்-புகழும். பதி -நகரம். கார்.ஆர்-கருமைநிறைந்த கரி-யானை. புயல் - கலை - ஆண்மான். கான் விலங்கை - காட்டினிடத்துள்ள மிருகங்களை வதைத்து - கொன்று. ஊன்-தசை வேடர்-மறவர். கூர்ஆர்கூர்மைபொருந்திய-அயில்விழி-வேல்போலுங் கண்களையுடைய தலைவி. நோ-துன்பம். 95. மறிவிழி-மான்போலுங்கண். ஓயாது மாறாமல். உடைந்து தோற்று. சயிலம் - மலை. ஏயா - வாராத, ஏயவள் ஏவிய தலைவி. - 96. முற்றிழை முற்றிய ஆப ரணங்களையுடைய தலைவி. புவிப் பெண் பூமாதேவி. சாருதி - சார்வாயாக. - 97. படிந்து முழுகி, எழுகாவகம் - வளர்ந்த சோலைகளினுள், சத்தத் தீவுகளிலும்.தென்றல் வசந்தகாற்று, நடலில் - நடுதலில். விடலில் - விடாத, வெம் - வெவ்விய. 98. மறை - வேதம். நிறை - கற்பு. கனி தெய்வதம் - தெய்வத்தன்மையையுடைய கன்னி, பழம். மணம் - விவாகம், வாசனை. iQ2