பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையாரின் அடக்கத் தலத்திற்கு கீழ்பாகத்தில், தமக்கென தாமே முன்னர் அமைத்துக் கட்டி வைத்திருந்த கபுறு ஷரீப் என்னும் புதை குழியில் நல்லடக்கம் செய்விக்கப்பட்டார். அன்னாரது இறுதி நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான இந்து முஸ்லிம்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அநுகூல புஞ்சம் 2-10-1936 அன்று, மேலப்பாளையம் எங் முஸ்லிம் சொசைட்டியாரின் சார்பில், திரு நபி சத்திரம்' எனும் நூலின் ஆசிரியர் மேடை முதலாளியெனும் ஜனோபகாரி தென்காசி ஜனாப் ஹாஜி மு.ந. முகம்மது சாஹிப் B.A., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஷம்சுத்தாசீனவர்களின் மேன்மையும் சிறப்புகளும் தக்கவர்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டு, முடிவில் அன்னாருக்காக அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றி, மறுமை நற்பேற்றிற்காக இறையருள் வேண்டப்பட்டது. ம்ேலும் அச்சபையினரின் தீர்மானப்படி, ஷம்சுத்தாசீனவர்களின் தனயர்களின் சமூகத்திற்கு 6-11-1936-ல் அனுதாபப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. ஷம்சுத்தாசீனவர்கள் மறைவையொட்டி, 'அநுகூல புஞ்சம்' என்ற பெயரில் இரங்கற் பாமாலை நூல் ஒன்று மேலப்பாளையம் அத்தியடித் தெரு செய்யிதப்பா புலவரது குமாரர் அருட்கவி முஹம்மது ஹனிபா புலவர் அவர்களால் இயற்றப் பெற்று, மதுரை மகா வித்வான் ம.கா. மு. காதிறு முகியித்தீன் மரைக்காயர் சாஹிப் அவர்களால் ஹிஜிரி 1355-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு கோட்டாறு சதாயவதானி கா.ப. செய்கு தம்பிப் பாவலரவர்கள் சாற்றுக் கவி வழங்கியுள்ளார். வாழ்க்கைத் துணை நலம் 'மங்கலம் என்ப மனை மாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. ” எமது பாட்டனார் அவர்களுக்கு வாழ்க்கைத் துணையாயமைந்த நலஞ் சான்ற எமது பாட்டியாரின் பெயர் கொ. ஹலன் பாத்திமா பீவி என்பதாகும். அனைவராலும் பங்களா அம்மா' என வாஞ்சையுடன் நினைவு கூரப்படும் இவர், வள்ளன்மை மிக்க தமது கணவருக்கு நற்பெருமையும், நன்மையும் தரத்தக்க நற்கு ைநற்செய்கைகளைத் தம் இயல்புகளாகக் கொண்ட பெருமாட்டி ஆவார். தமது மனையறத்தின் நல் அணிகலன்கள் என்று 13