பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மாணா பெருமையாக, பேனா பேண முடியாத அண்ணல்- தலைவனே. உன்னி நினைத்து. ஆடுகவிளையாடுவாயாக. 241. வெற்பனே மலையை யுடைய தலைவனே. அல்லுக்கு - இராக்காலத்திற்கு. அளி எல்லுக்கு -பகற்காலத்திற்கு. ஆம்பலாகிய பெரிய புஷ்பம், வாய். வண்டு, கிருபை. அல்லியிருமலர் 242. அஞ்சலென நடுங்கே லென்று. விஞ்ச-அதிகரிக்க. மேய பொருந்திய, கஞ்சம் தாமரை, முகம். சுகம் - வண்டு, இன்பம். 243. புகல் வெற்றி. போற்றலர் . பகைவர். இகல் வன்மை, இசை ர்ேத்தி, அகல் - நிதம்பம். . 24. துயில் நித்திரை. என்மதி சூரிய சந்திரர். கல்லும் தோண்டா நிற்கும். கடகரி - மதத்தையுடைய யானை, குறள்- பூதம். அலர் - பழிச்சொல். அல்லும் இரவும். 245. நீடும் - நீண்ட சிலை வில். வடி - வடித்த. மணம் - விவாகம். கோடும் கோணும். கைதவம்-துன்பம். 246. கொடுவரி-கொடிய இரேகைகளை யுடைய. சாரல் மலையடி வாரம். சேரல் வாரேல். அல்லும் - இரவும். ஆய்முத்தம் ஆராய்ந்தெடுத்த முத்தைப்போன்ற, வெண்ண கைக்கு வெள்ளிய பற்களை யுடைய தலைவிக்கு. 247. வடிக்கும் நீரைப்பொழி வாள். மருண்டு - பிரமித்து. உயிர்க்கும் பெருமூச்சு விடுவாள். சினக்கும் -கோபிப்பாள். உன்னிநினைத்து. தயங்கும் - இளைப்பாள், கயங்கும் - குழைவாள். அயில்விழிக்கு-வேல் போலுங் கண்களையுடைய தலை விக்கு. நின்சோகம் - உன்னாலேற்பட்ட துன்பத்தை கடிந்து-நீக்கி, அருள். காப்பாயாக. 248. பூபர் அரசர். இருகாலும் - அல்லும் பகலும். காவலர் நகர் காப் பாளர். முகில் - மழை. செல்-மேகம். 249. சினைத்தார் . பூங்கொத்துக்களாற் செய்யப்பட்ட மாலை. செம்மல்-அரசன். ஒன்னார். பகைவர். கனைத்து-ஒலித்து. நின் -உனது. காமாநலம் காமமாகிய நெருப்பை. 250. இடைக்கலை- அரையினிடத்துள்ள . வத்திரத்தை. கனவு - சொப்பனம். காரிகை - தலைவி. இகல் - பகைக்கின்ற. 251. வண்ணம் - நிறம். புலர்ந்து- வாடி. பூரித்து பருத்து. சுணங்கு - தேமல். இறை சிந்துகின்ற, சேப்ப- சிவக்க. சலித்தனன் . சோர்ந்தாள். பன்-சொல்லுகின்ற, வண்ணம் அழகிய. 252. புணர் -நெருங்கிய, பொன் னகர் - அழகிய ஆர். ஆற்றும் செய்யும், கருமம் - காரியம். அடைவல் - வருவேன். கூற்றும் . எமனும். கொடியும் காகமும். தேற்றும் தெளியச்செய்யும். 253. கடுஞ்சொல் கொடிய வார்த்தை. எம்மான் எமது தலைவி. சிலைவலவா வில்வித்தையில் வல்ல தலைவனே. உரை - வார்த்தை. 254. ஏகம் - ஒன்று. சோகம் - துன்பம். எள்ளேனும் . எள்ளத் தனையும். எள்ளேன் . இகழேன். துன்னலர் - பகைவர். ஆகம் - உடல். மென் - மெல்லிய. போக செல்ல. விடை உத்தரவு. 255. வள்ளம் -கிண்ணத்தை யொத்த. ஒன்னலர் - பகைவர். விள்ள வேறுபட. துணித்த வெட்டிய, அள்ளத் தகும் அள்ளுவதற்குத் தகுதி யான. அயர்ந்தால் மறந்தால், பழி தீமை. 256. சில சாதித்தற்கு சில காரியங்களைச் செய்து முடிப்பதற்கு.தரியார் தங்கமாட்டார். எதிர் - எதிர்க் கின்ற. நேரலர் - பகைவர். மலைய வெற்பு பொதிய மலை. புலராய் வாடேல். போதுவர் வருவார். 2O3