பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லத்தக்க வகையில், செய்கு மன்சூர், செய்யது தாமீம், முஹம்மது இபுராஹிம், என்ற ஆண்மக்கள் மூவர், காதிறு மீறா பீவி, முஹம்மது பீவி, ஹஸன் மீறாபீவி, பீவி பாத்திமா என்ற பெண் மக்கள் நால்வர் என நன்மக்கள் எழுவரை எழு கதிர்களென ஈன்றெடுத்து பெரு வாழ்வு வாழ்ந்திருந்த எமது பாட்டியார் அவர்கள், ஹிஜிரி 1360ம் ஆண்டு சபர் பிறை 11-ல் (10.3.1941) இவ்வுலக வாழ்வை நீத்தார். பல்லாயிரக்கணக்கான இந்து முஸ்லிம்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின், அன்னாரைத் தொழ வைத்து, அவருடைய கணவரது அடக்கத் தலத்திற்கு மிக அருகில் அதன் தென்புறமாக நல்லடக்கம் செய்விக்கப்பட்டார். பொன்றாப் புகழுடம்பினர் ஊரின் கண் நடுவே அமைந்துள்ள ஊருணி எனப் பயன் தரு வாழ்வு வாழ்ந்திருந்த இப்பெருமக்களால் நலம் அடைந்தோரும், பெருமகனார் நிறுவிச் சென்றுள்ள அறக்கட்டளை மூலம் பயன்கள் பெற்று வருவோரும், இவர்களது நற்குண நற்செயல்களை அறிந்தவர்களும் என மக்கள் பற்பலரும் நாளும் இவர்களின் அடக்கத் தலங்களுக்கு வருகை தந்து தரிசித்து, நன்றிப் பெருக்குடனும், நல்லெண்ணத்துடனும் அன்னவர்களின் மறுமை நற் பேற்றிற்கென இறையருளை வேண்டிச் செல்கின்றனர். - ஷம்சுத்தாசீனவர்களது அறக்கட்டளை சாசனத்திற்கிணங்க, அவர்கள் புரிந்து வந்த அறப்பணிகள் பலவும் அவர்களது சந்ததியினரால் தொடர்ந்து செய்து வரப்படுகின்றன. - மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே * J3.4.2000 w.s.T. சம்சு தப்ரேஸ் முஹர்ரம் 7 அக்தார்:V.S.T.தமுஸ் தாசிம் தரகனார் ஹிஜிரி 1421 ஹாமீம் பள்ளி மதரஸா மேலப்பாளையம்.

  • புறநானூறு (165):1-2

19