பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தினாபரணம். துலக்குதற்கு பிரகாசிப்பிப்பதற்கு. 42.0. வருமொருமையும் வராதிற்கு மறுமையையும். தாங்கும் காக்கும். உற்றபொருந்திய. இருமையும் இம்மை மறுமையாகிய ஈரிடத்தும். சீர்த்த கீர்த்தியற்ற. இயல் - அழகினையுடைய. அணங்கே தெய்வப்பெண்போலுந் தலைவியே. ஏந்தலர்தலைவர். 421. மாசையில் - பொன்னைப் போலும். பூத்த தேம்ற் புள்ளிகள் படர்ந்தன. மணி - இரத்தின வடங்களை யுடைய. வேனிலும் - வேனிற் காலமும். கூய கூவியது. உறுதுயர் - உற்றதுன்பத்தை. சீர்த்த-சிறப்புற்ற, பொருப்புமலை. ஆசையில்-பொன்னினிடத்து. 422. வார் . கச்சையுடைய, கொழுநர் - தலைவர். கொண்டல் - மேகம். எட்டும் எட்டுகின்ற. கொடை ஈகை. பொருள் கொடு - திரவியத்தைக் கொண்டு. வேண்டுவ விரும்புவனவற்றை 423. அரும்பும் - தாமரை மொட்டும். பிறையும் அர்த்தச் சந்திரனும். சிலையும் -வில்லும். புயலும் மேகமும், அமையும் - மூங்கிலும். அம்பும் கணையும். கரும்பும் - கன்னலும். குமிழும் குமிழ மலரும். கதலியும் வாழையும். ஆலும் ஆலிலையும். கமலமும்-தாமரைமலரும். வியன்-பெரிய. 24. சீர்த்து சிறப்புற்று. எதிர்த்தாரை - எதிர்ந்த பகைவரை. தேர் - இரதத்தை, வனத்தினும் - காட்டினிடத்தும். கானி னும்-பாலை நிலத்தும். மன்ன-பொருந்த. ஊர் - பதியை. வலவா - தேர்ப்பாகனே. தனத்தோடு - செல்வத்தோடு. இனத்தினும் உறவினானும். மனத்தினும் - மனத்தைப் பார்க்கினும். வேகமென விரைவென்று சொல்ல. வியப்பு ஆச்சரியம். கசெய்யாள்-இலக்குமி.தேவியும். தலைவியும். ஒர் மெய்யாருயிரென ஒருடலும் அதனிடத்துப் பொருந்திய உயிரு மென. கலந்தனம் - சேர்ந்தோம். மேலுமின்றும் - எக்காலத்தும். பொய்யா - பொய்க்காத. வரத்து ஆசீர்வாதத்தையுடைய, வரவினை யுடைய. உரவோன் - அறிஞனான. பொருப்பில் - மலையி னிடத்து. அவன் அந்த ஷம்சுத்தாசீனென் பானது. கையாய் - கைகளைப் போலும். பொழி பொழி - பொழி மாதத்திற்கு மூன்று மழைகளை, கனமழையே - பெருமை பொழிவாயாக 3) J fF. : j F3;, மாதமும்மாரி பொருந்தியமேகமே. ஷம்சுத்தாசீன் கோவை அரும்பதவுரை முற்றிற்று. 216