பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாமீம் வள்ளலின் வழித் தோன்றல்கள் V.S.T. செய்கு மன்சூர் தரகனார் ஷம்சுத்தாசீனவர்களின் மூத்த மகனாக 26-4-1895 -ல் பிறந்த இவர் V.S.T. ஹாமீம் பள்ளி மதரசாவின் டர்ன் அக்தாராக இருந்து தமது தந்தையார் நிறுவிய பல்வேறு வணிக நிலையங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். 1936-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்ட தொகுதியின் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டு 8150 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவரை எதிர்த்து போட்டியிட்ட A.K.பிஜ்லீ சாஹிப் 4250 வாக்குகள் பெற்றார். * பாளையங்கோட்டை நகர்மன்ற கவுன்சிலராகவும், மேலப்பாளையம் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும், பஞ்சாயத்து கோர்ட் உறுப்பினராகவும், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராகவும், மேலப்பாளையம் முஸ்லிம் அலோசியேஷன் செயலாளராகவும், மாவட்ட கல்விக்குழு உறுப்பினராகவும், கெளரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும், மேலப்பாளையம் நகர்மன்ற கவுன்சிலராக நீண்ட காலமும் பணியாற்றியவர். நெல்லை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் சிறந்த தலைவராகவும், மேலப் பாளையம் நகர முஸ்லிம் லீகின் செயலாளராகவும் விளங்கினார். சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலைகளின் போது அவற்றைச் சீர்படுத்தும் பணியில் சிறப்பான சேவைகள் புரிந்துள்ளார். பொது அறப்பணிகள் பலவற்றுக்கும் பெருந்தொகைகளை நன்கொடையாக வழங்கியுள்ள இவர் தமது தொண்ணுற்று ஐந்தாவது வயதில் காலமானார். ஹாஜி V.S.T. முஹம்மது அபுபக்கர் Ex.M.C. (அக்தார் : V.S.T. ஹாமீம் பள்ளி மதரசா V.S.T. அஹமது தாளபீம் ஆகியோர் இவரது புதல்வர்களாவர். × Directory of the Madras Legislature, Chennai, 1938, P. 240 21