பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V.S.T. செய்யது தாமீம் தரகனார் ஷம்சுத்தாசீனவர்களின் இரண்டாவது மகனான இவர் 24-7-1898-ல் பிறந்தவர். V.S.T. ஹாமீம் பள்ளி மதரசாவின்டர்ன் அக்தாராக இருந்து தமது தந்தையார் நிறுவிய பல்வேறு. வணிக நிலையங்களிலும் பொறுப்புகளை வகித்துப் பணியாற்றி, சிறந்த வணிகராகத் திகழ்ந்தார். பாளையங்கோட்டை நகர்மன்றத்தின் துணைத்தலைவராகவும், o மேலப்பாளையம் பஞ்சாயத்து போர்டு உறுப்பினராகவும், திருநெல்வேலி ஜில்லா போர்டு உறுப்பினராகவும், திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றியவர். திரிபுராவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். * - ஞானியார் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய, "மெய்ஞ் ஞானத் திருப்பாடற்றிரட்டு" நூல் மூன்றாவது முறையாகவும் பதிப்பிக்கப்பட வேண்டு மென்ற அவசியம் நேரிட்டபோது, பதிப்புப் பணிக்கான அனைத்துச் செலவினங் களையும் செய்யது தாமீம் அவர்கள் தாமே ஏற்று. 1960ஆம் ஆண்டில் பாடற்றிரட்டினை அதன் முந்தைய பதிப்பின் அமைப்பிலேயே அச்சிட்டு வெளியிடச் செய்தார். ஆன்மீகத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததோடு, தர்ம சீலராகவும், ஏழை, எளிய மக்களிடம் அளப்பரிய பரிவுணர்ச்சி கொண்ட வராகவும் விளங்கிய இவர் தமது எண்பதாவது வயதில் இயற்கை எய்தினார். V.S.T.U. தாஸிம் (எ) சம்சுத்தாசீன், V.S.T. ஆரிப், V.S.T. சம்சு தப்ரேஸ் (அக்தார்:V.S.T. ஹாமீம் பள்ளி மதரசா) ஹாஜிV.S.T. சம்சுல் ஆலம் (முன்னாள் மேலப்பாளையம் நகர்மன்ற உறுப்பினர்; முன்னாள் பாளை. தொகுதி சட்டமன்ற உறுப்பினர்; தற்போதைய திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்)vsாசம்சுல்ஹக்.vsாஷம்சுத்தான்.vsா.ஷெய்குமுகையதின் மலுக்கு முதலி ஞானியார் (எ) G. முஹம்மது ஆகியோர் இவரது புதல்வர்களாவர்.

  • T.M. Satchit, Who's who in Madras, 1939, cochin, P. 260.

22