பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாமீம் பாவலர் மகனார் வேண்டுதல் ஷம்சுத்தாசீனவர்களின் மகனார் W.S.T. செய்யது தாமீம் அவர்களுக்கு பாவலரவர்களின் மகனார் கோட்டாறு செ. பக்கீறு மீறான் சாகிபு அவர்கள் எழுதியனுப்பிய செய்யுட் கடிதம் கட்டளைக் கலிப்பா 1. ஆயுஞ் செந்தமிழ் முற்றுமின் றோர்ந்த நல் அறிஞர் என்றுனைச் சொல்லுவர் ஆதலால் ஈயும் பண்பினால் யாவரும் வள்ளல்என் றேற்றும் ஷம்சுத்தா சினெனுஞ் செம்மலை நீயும் போற்றிப் புகழ்ந்தொரு கோவைநூல் நிகழ்த்து வாயென என்னுயர் தந்தையைத் தோயும் அன்பினால் உங்களைச் சார்ந்தவர் சூழ்ந்து வேண்டினர் சென்றவந் நாளிலே. 2 வேண்டும் அன்னவர் எண்ணம்நன் றென்றுபா வேந்தர் எந்தையுஞ் சிந்தைகொண் டாய்ந்துதான் மாண்ட கூத்தனும் மற்றுள செந்தமிழ் வான ரும்முரை கோவையில் மிக்கதாய் யாண்டும் நின்றொளி செய்திடல் வேண்டுமென் றெண்ணி யாத்திட யாவும் அருள்பெரும் ஆண்ட வன்தண் ணருளினைக் கொண்டுநன் காக்கி யேநமக் கீந்தனர் உண்மையே, 3 சொன்ன அந்தக் கவியமு துண்டிட சோலைப் பூமது வுண்ண விரையளி அன்ன தாய்த்தமிழ்ப் பாவலர் நாவலர் ஆவ லோடப் பிரபந்தம் தன்னையே என்னை நித்தமுங் கேட்பதால் அன்னவர்க் கென்ன மாற்றம் உரைப்பதென்றுன்னைநான் முன்னர் கேட்டனன் நற்பதில் தந்தனை முழுதும் அவ்வுரை முற்றுறச் செய்வையே. 4 கண்டு தேன்முக் கனியமிழ் திற்றுணை கண்டி டாநயச் சொன்மலி கோவையைக் கண்டு நாட்டவர் உட்களித் தாய்ந்திடக் கருதும் அச்சிற் பதித்தலுன் நற்கடன் எண்டி சையிலும் உன்புகழ் ஓங்கிடும் - இன்ப லோகிலுன் தந்தையும் எந்தையும் விண்டு வாழ்த்துவர் உன்னருந் தொண்டினை மேலும் உண்டிறை நல்லருள் என்றுமே, 24