பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாமீம் இரண்டாம் பதிப்பிற்கான முகவுரை எங்களது பாட்டனார் W.S.T. ஷம்ஸ்-தாளபீம் தரகனார் அவர்களை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு சதாவதானி கா.ப. செய்குதம்பிப் பாவலர் அவர்களால் பாடப் பெற்ற "ஷம்சுத் தாசீன் கோவை நூலின் முதற்பதிப்பு எமது தந்தையரால் பதிப்பிக்கப்பட்டு கி.பி. 1919-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பாவலரவர்கள் தமது வாழ்வின் இறுதி நாட்கள் வரையிலும் எங்களது இல்லத்திற்கு வருகைதருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எங்களில் வயது மூத்த பிள்ளைகள் யாவரும் அவருடன் நன்கு பழகியுள்ளோம். ஆழம் காண இயலாத கல்விக் கடலாக அவர் விளங்கிய போதிலும் ஏனையோரிடம் அவரவர்களின் வயது, கல்வித் தேர்ச்சிக்கேற்ப இனிய பண்புடன் பேசிப் பழகுவார். இலக்கியக் கடலுள்மூழ்கி அவர் முகந்து தரும் தமிழமுதினைப் பருகுவதற்கென கற்றறிந்தோரும் சுவைஞர்களும் எந்நேரமும் அவரைச்சூழ்ந்திருப்பர். பாவலரவர்களின் மூத்த மகனார் செ. பக்கீறு மீறான் சாகிபு அவர்கள் தமது தந்தையாரின் அரும்புலமையையும் சீரிய பெருமையையும் நன்குணர்ந்தவராயும் மரபு குன்றா வகையில் செந்தமிழ்ச் செய்யுட்களை இயற்றும் திறன் பெற்றவராகவும் விளங்கினார். மகாமதிப் பாவலரவர்கள் 13-2-1950-ல் இயற்கை எய்தினார். தமது தந்தையாரின் மறைவிற்குப் பின்னரும் பக்கீறு மீறான் சாகிபவர்கள் எங்களது குடும்பத்தினரோடு நட்புரிமையுடன்கூடிய நல்லுறவு பூண்டவராய் எமது இல்லத்திற்கு பலகாலும் வருகைதந்துள்ளார். 'ஷம்சுத்தாசீன் கோவை நூலினை மீண்டும் அச்சிற் பதிப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு தாம் வேண்டி வந்ததை வலியுறுத்தி எங்களது தந்தையார் W.S.T. செய்யது தாமீம் தரகனார் அவர்களுக்கு அவர் எழுதியனுப்பிய 'அஞ்சற் பாட்டு இவண் தரப்பட்டுள்ளது.இந்நூலினை மறுமுறையும் அச்சிற் பதிப்பித்து வெளியிட வேண்டுமென நாங்கள் கொண்டிருந்த எண்ணத்திற்கு எங்களது தந்தையரின் மூத்த மருமகரும்,எங்களது மைத்துனருமாகிய V.S.S. செய்யது அஹமது அப்பாஸ் அவர்களும் ஏனைய தமிழ் ஆர்வலர்களும் உரமூட்டி வந்துள்ளநிலையில், கடந்த சூலைத் திங்களில் பாளையங்கோட்டை மாநில தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற சதாவதானி செய்குதம்பிப் பாவலர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அகில இந்திய வானொலியில் உயர்நிலைப் பதவி வகித்தவரும், "இலக்கியப் பேழை" எனும் கவின்மிகுநூலின் ஆசிரியரும் பாவலரின் மகனாருமான கே.பி.எஸ். ஹமீது சாஹிப் அவர்கள், "அவதான்க் கலைஞர்', 'செந்தமிழ் வளர்த்த செய்குதம்பி - முதலான நூல்களின் ஆசிரியரும், பாவலரின் தகை சான்ற மாணாக்கருமான சுசீந்திரம் வித்து வான் சி. குமரேச பிள்ளை ஆகியோர் முன்னிலை யில் 25