பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னூலாசிரியர் 'வரலாற்று ஆய்வுச் செம்மல்" செதிவான் எம்.ஏ., எம்.ஃபில், அவர்கள்,மற்றும் ஏனைய அறிஞர் பெருமக்கள் ஆகியோர் 'ஷம்சுத்தாசீன் கோவை' துலினை மறுமுறையும் அச்சிற்பதிப்பிக்க வேண்டுமென வலியுறுத்திப் பெய்த சொன்மாரியானது எங்களது எண்ணப் பயிருக்கு நன்னீரென அமைந்து விடவே பதிப்பிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டோம். நூலினை பதிப்பித்துத் தரும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புச் சகோதரர் செ.திவான் அவர்களை வேண்டிக் கொண்டபோது மனமுவந்து இசைவுதந்து, மிகுந்த சிரத்தையுடன் ஒரு தவம் போலவே இப்பணியினை மேற்கொண்டு நிறைவேற்றித் தந்துள்ளார். மேலும் இதுகாறும் தெரிய வந்துள்ள கோவை நூல்களைப் பற்றிய அரிய கட்டுரைக் கோவை ஒன்றினையும் வழங்கியுள்ளார். பொன் போன்ற காலத்தையும், தமது கவனத்தையும் இதற்கென மிகுதியும் ஒதுக்கித் தந்து ஒத்துழைப்பு நல்கிய செ. திவான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதுடன் அவரது தமிழ்ப்பணியும் சமுதாயப் பணிகளும் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம். இந்நூலினுக்கு அணிந்துரைகள் வழங்கிச்சிறப்பித்திருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் தமிழறிஞர் தொ.பரமசிவன் அவர்களுக்கும், முதுபெரும் புலவர் சுசீந்திரம் சி.குமரேச பிள்ளை அவர்களுக்கும், இப்பணியில் எங்களுக்கு ஆர்வமும், ஊக்கமும், ஒத்துழைப்பும் நல்கியதமிழ்நெஞ்சங்களுக்கும், செவ்விய முறையில் அச்சுப் பணிகளை நிறைவேற்றித்தந்த ஹமீது பிரஸ் சகோதரர் எம்.சாகுல் ஹமீது அவர்களுக்கும். V.S.T. குடும்பத்தினர் சார்பில் மனமுவந்த நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இறைவன் அருளால் "V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை" யின் சார்பில் பதிப்பிக்கப் பெற்று, தமிழுலகம் பயன்பெறும் வகையில் இலவச வெளியீடாக வழங்கப்படும் 'ஷம்சுத்தாசீன் கோவை'நூலின் இவ் இரண்டாம் பதிப்பினை எங்களது பாட்டனார் V.S.T. ஷம்ஸ் தாளபீம் தரகனார்; சதாவதானி கா.ப. செய்கு தம்பிப் பாவலர் ஆகிய பெருமக்கள் இருவரின் நினைவினுக்கு சமர்ப்பிக்கின்றோம். அன்னவர்களது மறுவுலக நற்பேற்றிற்கு இறையருள் இறைஞ்சுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். - அன்புடன் ஹாஜி V.S.T.முஹம்மது அபுபக்கர் v.S.T. சம்சுதப்ரேஸ் v.S.E.M. ஷம்சுத்தாசின் 13.4.2000 - a - முஹர்ரம் 7 அக்தார்கள்: M.S.T. தமுஸ்தாசிம் தரகனார் ஹிஜிரி 1421 - ஹாமீம் பள்ளி மதரஸா, மேலப்பாளையம். ஹாஜி V.S.T. சம்கல் ஆலம் E.M.A., M.C. செயலாளர், V.S.T. ஹாமீம் பள்ளி மதரஸா குடும்ப அறக்கட்டளை. 26