பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் தமிழறிஞர் தொ.பரமசிவன் அவர்கள் அளித்த அணிந்துரை பாராட்டுக்குரிய பணி பழந்தமிழ் இலக்கியம் அகம், புறம் என்ற பொருட்பாகுபாட்டினை உடையது. அவை இரண்டிலும் தமிழிலக்கிய, இலக்கணத் தொகுப்புகளில் அகப்பொருளே சிறப்பிடம் பெறுகின்றது. அளவிலும் அதுவே பேரிடம் பெறுகின்றது. குறிஞ்சிப் பாட்டின்துறைக் குறிப்பில் உள்ள தமிழ் என்ற சொல்லே தமிழ் அகப் பொருளை உணர்த்தி நிற்பதாக அமைந்துள்ளது. பிற்காலத்தில் எழுந்த தமிழ் அகப் பொருள் நூலொன்றுக்கு தமிழ்நெறி விளக்கம்' என்பதே பெயராகும். அகப்பொருள் வளர்ச்சியில் ஒரு கால கட்டத்தில் அக இலக்கியத்தின் பல்வேறு துறைகளையும் ஒன்றாகச்சேர்த்து கோவை' என்னும் புதிய சிற்றிலக்கிய வகையினையும் உருவாக்கினர். சங்க அகப்பாடல்கள் போல கோவை நூல் பாடல்களைத் தூய அக இலக்கியமாகக் கொள்ள இயலாதுதான்; ஏனென்றால் கோவை நூலின் பாடலுக்குப் பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் என தலைவர் இருவராவார். 'பாண்டியனின் மதுரை நெடுந்தெருவில் பெண்ணே நாம் சந்தித்தபோது என்று பேசும் காதலனே கிளவித் (அகப்பொருளுக்கு) தலைவனாவான். பாட்டுடைத் தலைவன், பாண்டியனாவான். எனவேதான்கோவைநூலைத்துய அக இலக்கியநூலாக கூறமுடியாது. இது புறப்பொருள்சாயலை உடையது என்று நாம் கூறுகிறோம். தமிழ்ப்பேரரசுகள்வலிமையை இழந்து, புரவலர்இல்லாத காரணத்தால், தமிழ்ப் புலவர்கள் அந்தந்த வட்டாரத்தில் வாழ்ந்த நிலக்கிழார்களையும், குறுநிலத் தலைவர்களையும், படைத் தலைவர்களையும், பாட்டுடைத் தலைமக்களாக்கினர். இலக்கியத்தின் வடிவத்தைப் பொறுத்தமட்டில் இதனைச் சென்று தேய்ந்து இறுதல் என்றுதான் சொல்ல வேண்டும். காலனி ஆட்சிக் காலத்தில் சிற்றரசர்களும் பெருநிலக்கிழார்களும் அதிகாரத்தினையும் செல்வத்தினையும், பெருமையினையையும் இழந்து போயினர். 'முன்னிக்கவிதை வெறி மூண்டெழுந்த' சிலர் ஆங்கிலேயராட்சியில் பொறுப்பு வகித்த சில அதிகாரிகளையும் பட்டுடைத் தலைவராக்கினர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நன்றி உணர்வோடு நீதிபதி வேதநாயகர் மீது குளத்தூர்க்கோவை' பாடியதும் இப்படித்தான். 27