பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கூட தமிழ்க்கவிதை மரபில் தோய்ந்தவர்களுக்கு சிற்றிலக்கியங்களின் பிடியிலிருந்து முழுமையாக வெளியேற முடியவில்லை. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் பழுத்த தமிழ்ப்புலமை சிற்றிலக்கியங்களில் சிக்கி நேரிடையாக 20 ஆம் நூற்றாண்டு தமிழர்களுக்குப் பயன்படாமல் போனது வருந்தந்தான். அவருக்குப் பின்னர் இந்தச் சுழலில் சிக்கிய புலமையாளர்களாக சோழவந்தான்அரசஞ்சாண்முகனாரையும், மகாமதி செய்குதம்பிப் பாவலர் அவர்களையும் குறிப்பிட வேண்டும். ஆற்றல் மிகுந்த கட்டுரையாளராக விளங்கிய பாரதியார்கூட பள்ளியெழுச்சி, தசாங்கம், இரட்டைமணிமாலை, சீட்டுக்கவி என்றவாறு மரபின் தொடச்சியிலே காலூன்றிப் பின்னரே புதிய திருப்பங்கள் கண்டவராவார். 款 செய்குத்தம்பிப் பாவலர் அவர்களின் நினைவாற்றலும், நாவன்மையும், இலக்கணப் பயிற்சியும், இலக்கியத்தோய்வும் பற்றிய சமகாலத்துக் குறிப்புக்கள் நமக்கு நிறையவே கிடைக்கின்றன. அவர் பெற்ற 'மகாமதி , 'சதாவதானம்', 'சதாவதானி, 'பாவலர் ஆகிய பட்டங்களும் அவற்றை நமக்கு உணர்த்துகின்றன. - தேசிய இயக்கத்தில் தொடக்க காலத்தில் இளங்கவிஞராகப் பாவலர் படைத்தளித்த நூல் ஷம்சுத்தாசீன் கோவை இந்நூலின் முதற்பதிப்பு:1919இல் வெளிவந்திருக்கிறது. அக்காலத்தில் கெளரவ மாஜிஸ்திரேட் ஹானரரி மாஜிஸ்திரேட்' என்ற மதிப்புறு நீதிபதி பதவி மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. அப்பொறுப்பினை வகித்த மேலப்பாளையம் ஷம்சுத்தாசீன் அவர்கள் வள்ளலாகவும், தமிழிலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்திருக்கிறார்கள். (மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த தமிழறிஞர் M.S.பூர்ணலிங்கம்பிள்ளை அவர்கள் இவரது தொடர்பினாலேயே இஸ்லாமிய தமிழ்ப் புலவர்கள் பற்றிய நூலொன்றை எழுத முனைந்திருக்கிறார் என்பது (மற்றொரு வரலாற்றுக் குறிப்பினால் தெரியவருகிறது). பாவலர் அவர்கள் தமிழிலக்கியப் பயிற்சியின் ஆழத்தைக் காட்டுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. ஒரு காதல் நிகழ்ச்சியை 400 துறைகளில் விரித்து எழுதுவது நுட்பமான இலக்கியப் பயிற்சி உடையவர்களுக்கு மட்டுமே இயலும், இதிலுள்ள மற்றொரு சிறப்புகாதல் நிகழ்ச்சியின் வளர்ச்சிக்கு நாள் வரையறை செய்திருப்பதாகும். பாவலரின் மதிப்பீட்டின்படி இந்நூலில் 56 நாள் நிகழ்ச்சிகள் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத் தலைவரின் ஞானாசிரியர் பெயரும்(கோட்டாறு ஞானியார் சாகிப்) குறிப்பிடப்பட்டிருப்பது கோவை நூல்கள் காணாத மற்றொரு புதுமையாகும். இம்முயற்சி இஸ்லாமிய சூஃபி மரபின் தாக்கத்தால் விளைந்திருக்கிறது. பாட்டுடைத் தலைவரின் மலை தமிழ்ச்சிலம்பு ஆகிய பொதியமலை என்பதும் ஆறு தாமிரபரணி என்பதும் பாவலர் 'மண் மணந்த மணாளர் என்பதனைக் காட்டும் சான்றுகளாகும். கவிதையின் நடையினைப் பாவலர் பிற்காலத்தில் எழுதிய தாயகமான்மியமஞ்சரி'யின் நடையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இக்கோவை நூல் இறுக்கமான கவிதை நடையினைக்காட்டுவதாக அமைந்துள்ளதனை உணரலாம். இந்த மரபின் இறுக்கம் பாட்டுடைத்தலைவர் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை நமக்குத் 23