பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தராமல் போய்விட்டது. (பாண்டிக் கோவை, கப்பற்கோவை தவிர்ந்த எல்லாக் கோவை நூற்களுக்கும் இது பொருந்தும்) நிறைவாக மரபு சார்ந்த கவிதையின் இனிமைக்கு இரண்டு சான்றுகள் பந்தகத் தாசை பரிந்திலை பைந்துனர் பற்றிலைசெய் சிந்தக வண்டலுஞ் சேர்த்திலை யன்னை சினத்ததுண்டோ நொந்தகம் வாடினை நோற்றினை கண்ணி நுடங்கிடையே வந்ததென் ஹாமீம் புரஷம்சுத் தாசீன் மகிழ்கிரிக்கே, பாலுங் கசப்பப் பழமும் புளிப்பப் படர்ந்தமுலை மேலும் பசப்ப விழிநீ ரரும்ப மிடைந்தனளாற் கோலும் பெருந்தவக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா யேலுங் குணத்தணங் கேயிசை யாயுற்ற தேந்திழைக்கே. இந்நூலின் பதிப்பாசிரியர் செதிவான்அரிய முயற்சியுடைய வரலாற்று ஆசிரியர்; தமிழிலக்கிய மாணவரல்லர் என்பது வியப்புக்குரிய செய்தியாகும். இந்நூலுக்கு அவர் தந்துள்ள பதிப்புரை. அவரது முயற்சியின் அருமையினையும், வீச்சினையும் காட்டுவதாகும். அறியப்படாமல் மறைந்துபோன தமிழ் நூல்களை மறுபதிப்புச் செய்வது ஒரு அரிய தமிழ்ப்பணியாகும். ஏனென்றால் விரிந்த,ஆழமான, முழுமையான தமிழ்ப் புலவர் வரலாறு' என்பது இன்னமும் தமிழ் ஆய்வாளர்களின் கனவாகவே இருந்து வருகிறது. அக்கனவு மெய்ப்படும் முயற்சிகளில் ஒன்றினை தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் செ.திவான் தொடங்கியுள்ளார். அவரது பணி நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியதாகும். - பதிப்பாசிரியரின் வரலாற்று முயற்சிகளைப் போல, இலக்கிய முயற்சிகளையும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். - மேலப்பாளையம், WSTஷம்சுத்தாசீன்தரகனார்.அறக்கட்டளை, ஹாமீம் பள்ளி மதரஸா குடும்ப அறக்கட்டளை சார்பில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுவது பாராட்டுக்குரியதாகும். தொ.பரமசிவன் தமிழியல் துறைத்தலைவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். 29