பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை நூல்கள் அத்தனையையும் தொகுத்திருப்பது அரிய சேவை அணிந்துரை (சுசீந்திரம் வித்துவான் சி. குமரேசபிள்ளை, ) சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவர்கள் என் தமிழாசிரியர். நான் அவர்களிடம் 1940முதல் 10 ஆண்டுகள்தமிழ்கற்றேன். அக்காலையில் அவர்கள் சொன்ன அரும்பெரும் கருத்துக்களைத் தொகுத்து அவதானக் கலைஞர் என்றும் 'செந்தமிழ் வளர்த்த செய்குதம்பி என்றும் இருநூற்கள் வெளியிட்டேன். அந்நூற்களைப் பார்வையிட்ட செதிவான் அவர்கள் உள்ளத்தில் பாவலரவர்களின் நூற்களைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் உதயமானது அவர்களின் தமிழ்க்காதலை எடுத்துக்காட்டுகிறது. - - அக்காதலில் பாவலர்அவர்கள்எழுதிய சிறப்பிற்குரியசம்சுத்தாசீன்கோவை அச்சு வாகனம் ஏறி வருகிறது. அதில் புதுமைகளைப் புகுத்தி கவிதைச் சுவையில் நம்மைக் கனியச்செய்து விடுகிறார் பாவலர். அம்முயற்சியில் தமிழ் இலக்கிய வரிசையில் அமைந்த கோவை நூற்கள் அத்தனையையும் வரலாற்று ஆசிரியர்செதிவான் தொகுத்துக்காட்டியிருப்பது ஓர் அரிய சேவை. அதற்காக அவருக்கு என் வாழ்த்துக்கள். - தமிழ் இலக்கிய உலகில் தமிழ்த்தாய்க்குப் புலவர் பெருமக்கள் அணிவித்த அணிகளை புதுக்கி செம்மைப்படுத்தி விளக்கி அணிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செதிவான்.அவர்களுக்கு மீண்டும் என்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மேலப்பாளையம், VSTதமுஸ்தாசிம் தரகனார்.அறக்கட்டளை, ஹாமீம் பள்ளி மதரஸா குடும்ப அறக்கட்டளை சார்பில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுவது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியதாகும். சுசீந்திரம், இப்படிக்கு, 25. 1.2{XX). சி.குமரேசன். 3O