பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜனாப்.எம்.ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களின் வாழ்த்துச்செய்தி மேலப்பாளையம் வள்ளல்.V.S.T. தமுஸ்தாசீம் தரகனார் அவர்கள் கல்வி பெற வழியில்லாத ஆதரவற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றை இலவசமாக வழங்கி, தக்க ஆசிரியர்களைக் கொண்டு சன்மார்க்கக்கல்வியும், நல்லொழுக்கமும் பயிற்றுவிக்கச் செய்தவர்; ஹாமீம் பள்ளி மதரஸா என்ற பெயரிலான இறையில்லமும் அத்துடன் இணைந்த அரபிப் பாடசாலையையும் நிர்மாணித்தவர்; ஆலிம்களுக்கும், தமிழில் புலமை பெற்ற சான்றோர்களுக்கும் வேண்டும்போது வேண்டியனகொடுத்து ஆதரித்த பண்பாளர்.இஸ்லாம் மார்க்கத்தைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்களை அன்போடு ஆதரித்தவர். தமது வாணிப நிலையங்களில் நூற்றுக்கணக்கானோரைப் பணியில் அமர்த்தி, அவர்களது குடும்பங்களின் வறுமையைப் போக்கிய கருணையாளர் வள்ளல்தமுஸ்தாசீம் தரகனார். - கோட்டாற்றில் பிறந்த பாட்டாறு சங்கைமிக்க சதாவதானி செய்குதம்பிப்பாவலர் தொண்டிச்சான்றோர்களால் கலைக்கடல் என்றும், - திண்டுக்கல் சான்றோர்களால் அல்லாமா டாக்டர் என்றும், நாஞ்சில் நாட்டவர்களால் 'தமிழ்ப் பெரும்புலவர் என்றும், செய்கு என்று தந்தையாராலும், 'தம்பி என்று தாயாராலும், 'பாவலர் என்று உலகமக்களாலும் பாராட்டப்பெற்றவர் செய்குதம்பிப்பாவலர். மேலப்பாளையத்தில் பிறந்து வளர்ந்து பெரும் புகழுடன் மறைந்த பெரியார்ஷம்சுத்தாசீன் அவர்கள் மீது செய்குதம்பிப் பாவலர் அவர்களால் பாடப்பெற்றது'ஷம்சுத்தாசீன்கோவை'யாகும்.