பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ண அலைகள்(பதிப்புரை) 'கோவை நூல் ஏதாவது நீர் வாசித்திருக்கிறீரா?' என்று பிள்ளையவர்கள் கேட்டார்கள். 'திருக்கோவையாரும் தஞ்சைவாணன் கோவையும் படித்திருக்கிறேன்' என்று விடை கூறினேன். 'இப்போது சீகாழிக் கோவை பாடம் கேட்கலாம்' என்று அவர் சொன்னார். ... நான் பாடம் கேட்பதற்கு அக்கோவையின் பிரதி கிடைக்கவில்ல்ை. பிள்ளையவர்களிடம் இருந்த பிரதி வேறொருவர் வசம் இருந்தது. "கூறை நாட்டுக் கனகசபை ஐயரிடம் பிரதி இருக்கிறது. ஆனால் அதை அவர் எளிதில் கொடுக்க மாட்டார். வேறு யாரிடமாவது இருக்கும்; வாங்கித் தருகிறேன்' என்று அவர் சொன்னார். அன்று என் ஆசிரியர் வழக்கம் போல் மத்தியான போஜனம் ஆண் பிறகு படுத்துக் கொண்டிருந்தார். கூறை நாடு மாயூரத்திலிருந்து இரண்டு மைல் தூரமிருக்கும். அவர் துயிலும் சமயமறிந்து நான் கூறை நாட்டுக்கு மிகவும் வேகமாக ஒட்டமும் நடையுமாகச் சென்றேன். எப்படியாவது கனகசபை ஐயரிடமிருந்து சீகாழிக் கோவைப் பிரதியை வாங்கி வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றேன். அவரிடம் நயந்து கேட்டு அதை வாங்கினேன். பிள்ளையவர்கள் விழித்துக் கொள்வதற்குள் வந்து விட வேண்டுமென்று ஒரே ஒட்டமாக மாயூரம் வந்து விட்டேன். அப்போது ஒரு மணியிருக்கும். அந்த வெயிலின் வெம்மையும், இரண்டு மைல் தூரம் வேகமாகப் போய் வந்த களைப்பும் கோவைப் பிரதி கிடைத்த சந்தோஷத்தில் தோற்றவில்லை. பிள்ளையவர்கள் விழித்துக் கொண்ட போது நான்சுவடியும் கையுமாக எதிரில் நின்றேன். - "என்ன புஸ்தகம் அது?’ என்று கேட்டார் அவர். 'சீகாழிக் கோவை." 'ஏது?" 'கனகசபை ஐயருடையது.' "எப்போது வாங்கி வந்தீர்?" 'இப்போது தான்." அக்கோவையைப் பாடம் கேட்க வேண்டுமென்றிருந்த வேகம் வெயிலின் வெம்மையையும் பொருட்படுத்தாமல் ஒட்டமும் நடையுமாகச் சென்று வாங்கி வரத் தூண்டியதென்பதை ஆசிரியர் உணர்ந்து கொண்டார். உடனே பாடம் சொல்லத் தொடங்கினார். 31