பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடம் சொல்லிய ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளை; பாடம் கேட்பதற்காக வெயிலில் ஒடிச்சென்று சீகாழிக் கோவை நூலினைப் பெற்று வந்தது மகாமகோபாத்தியாய தாகூவிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் என்பது தமிழுலகம் நன்கறிந்த விஷயங்களில் ஒன்றாகும். ' - 'சீகாழிக் கோவையைப் பாடங் கேட்பதற்காக உ.வே. சாமிநாதையர் வெயிலில் ஒடிச் சென்று வந்ததையும், அவர்களே தமது வாழ்நாளில் 1903 இல் சீகாழிக் கோவையையும், திருவாவடுதுறைக் கோவையையும், 1935இல் பழமலைக் கோவையையும், 1937 இல் சிராமலைக் கோவையையும், திருவாரூர்க்கோவையையும் பதிப்பித்திருப்பதையும் அறிந்தபோது, கோவை நூல்கள் பற்றிய விவரங்களைத் தேடலானேன். கோவை நூல் என்றால் என்ன? அன்னைத் தமிழ்மொழியில் வழங்கி வரும் பிரபந்தங்கள் 96 ஆகும். 'சிவந்தெழுந்த பல்லவராயன் உலா என்ற 17ஆம் நூற்றாண்டுப் பிரபந்தம் 'தொண்ணுற்றாறு கோலப்பிரபந்தங் கொண்ட பிரான் என்று கூறுகிறது. * தொண்ணுற்றாறு வகை - சதகம், பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம், அகப்பொருட் கோவை, ஐந்திணைச் செய்யுள், வருக்கக் கோவை, மும்மணிக்கோவை, அங்கமாலை, அட்டமங்கலம், அநுராகமாலை, இரட்டைமணிமாலை, இணைமணிமாலை, நவமணிமாலை, நான்மணிமாலை, நாமமாலை, பல்சந்தமாலை, கலம்பக மாலை, மணிமாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருக்கமாலை, தண்டகமாலை, வசந்த மாலை, மெய்க்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேனின் மாலை, தாரகை மாலை, உற்பவமாவை, தானைமாலை, மும்மணி மாலை, வீரவெட்சி மாலை, வெற்றிக் கரந்தை மஞ்சரி, போர்க்கு எழுவஞ்சி, வரலாற்று வஞ்சி, செருக்களவஞ்சி, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகைமாலை, வாதோரண மஞ்சரி, எண் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், ஒலியலந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, உலா, உலாமடல், வளமடல், ஒருபா ஒருபது, இருபா இருபது, ஆற்றுப்படை, கண்படைநிலை, துயிலெ டைநிலை, ஊரின்னிசை, பெயரின்னிசை, பெயர் நேரிசை, ஊர் நேரிசை, ஊர் வெண்பா, விளக்கு நிலை, புறநிலை, கடைநிலை, கையறுநிலை, தசாங்கப்பத்து, தசாங்கத்த பல், அரசன் 1 உ.வே. சாமிநாதையர், என் சரித்திரம், சென்னை, 1982, பக். 193, 194. 2 இ.மு. சுப்பிரமணியபிள்ளை, வள்ளுவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ், ஐந்தாம் பகுதி, 1964, பக். 152, 153. 3 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14ஆம்நூற்றாண்டு, மாயூரம், 1968 பக். 322. 32