பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்தம், நயனப்பத்து, பயோதரப்பத்து, பாதாதிகேசம், கேசாதிபாதம், அலங்காரபஞ்சகம், கைக்கிளை, மங்கலவெள்ளை, தூது, நாற்பது, குழமகன், தாண்டகம், பதிகம், சதகம், செவியறிவுறுஉ, வாயுரை வாழ்த்து, புறநிலை வாழ்த்து, பவனிக்காதல், குறத்திப்பாட்டு (குறவஞ்சி), உழத்திப்பாட்டு, ஊசல், எழு கூற்றிருக்கை, கடிகை வெண்பா, சின்னப்பூ விருத்தஇலக்கணம், முதுகாஞ்சி, இயன் மொழி வாழ்த்து, பெருமங்கலம், பெருங்காப்பியம், காப்பியம் முதலிய 96 வகைப் பிரபந்தங்கள் தமிழில் உள்ளன. " சிற்றிலக்கியம் 'பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது, நன்கு யாக்கப்பட்டது என்று பொருள். பிரபந்தம் என்ற சொல் தமிழ் வழக்கில் சிறிய இலக்கிய நூல்களைச் சிறப்பாகச் சுட்டத் தொடங்கியது. அதற்கு நிகராகச் சிற்றிலக்கியம் என்ற சொல்லும் வழக்காற்றில் வரத் தொடங்கியது. இச்சிற்றிலக்கிய நூல்கள் நெடும்பாட்டுப்போல்வன. பலதுறைசார்ந்த பெரு நூல்கள் போலல்லாது, ஒரு சில துறைகளைப் பற்றிய செய்திகளையே உள்ளடக்கின. சுருங்கிய அளவில் அமைவன அதனால் குறைந்த காலத்தில் படித்து முடிக்கக் கூடியன. இவை வட்டாரச் சார்பு மிக்கன. சங்ககாலப் பத்துப் பாட்டுக்கள் போலக் குறிப்பிட்ட இறைவனை, மன்னனை, வள்ளலைப் பற்றிப் புகழ்வதற்காக, சிறப்பாக எடுத்துரைப்பதற்காக எழுதப்பட்டன என்பர் தமிழண்ணல். ' சிற்றிலக்கிய காலம் - "தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து, சங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டு, ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதியாகத் துளிர்த்து, ஏழாம் நூற்றாண்டில் கோவை'யாகச் செடியாகி, எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாகக் கிளைத்து, பதினோராம் நூற்றாண்டில் சதகமாகவும், - பரணியாகவும் அரும்பி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிள்ளைத் தமிழாக மொட்டாகி, பதினான்காம் நூற்றாண்டில் துதாகப் பூத்து, பதினாறாம் நூற்றாண்டில் பள்ளாகக் காய்த்து, பதினெட்டாம் நூற்றாண்டில் குறவஞ்சியாகக் கனிந்தது. சிற்றிலக்கியப் பெருமரத்தில் இன்று ஆயிரக்கணக்கான சுவைக் கனிகள் பழுத்து தமிழ்த்தேன் மாந்தும் வண்டுகளை வரவேற்கின்றன என்பர் முனைவர். ந.வீ. செயராமன். ' - 4 ஆ. சிங்கார வேலு முதலியார், ஆ. சிவப்பிரகாச முதலியார், அபிதான சிந்தாமணி, சென்னை, 1991, பக். 1122 - 1127. - 5 புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மதுரை, 1992, பக். 331. 6 சிற்றிலக்கியச் செல்வங்கள், சிதம்பரம், 1967, பக். 31. 33