பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வளம் மிகுந்து சிறந்து விளங்கும் நம் தமிழ் மொழியில் சீரும் சிறப்பும் நிறைந்த சிற்றிலக்கியப் பகுதியில் 'கோவை' என்ற இலக்கிய வகைக்கு வருவோம். கோவை உரு, திரு, பருவம், குலம், குணம் ஆகியன ஒத்த தலைவனும் தலைவியும் தெய்வ அருளால் தாமே எதிர்ப்பட்டு களவு நிகழ்த்திப் பின் கற்பு நிலையில் இல்லறம் நிகழ்த்தும் இனிய நிகழ்ச்சிகளைக் கூறுவது கோவையாகும். அகத்துறைக் கூறுகளைக் கோவைப்படுத்திக் கூறுவதால் கோவை’ எனப் பெயர் பெற்றது. ” வச்சணந்திமாலை 'ஆய்ந்த கலித்துறை தான் நானூறகப் பொருள் மேல் வாய்ந்த நற் கோவையா மற்றுரைப்பின்' என்று வச்சணந்திமாலை கட்டளைக் கலித்துறை நானூறு அகப்பொருள்மேல் வருவன கோவை என்று விளக்கம் தருகிறது வச்சணந்திமாலை. 8 o 'கோவை என்பது காதலர் இருவரின் காதல் உணர்ச்சிகளையும், நிகழ்ச்சிகளையும் ஒரு வரலாறு போல் படிப்படியாகக் காட்டி ஒரே வகையான செய்யுள்களால் தொடர்ந்து பாடி அமைக்கும் நூல் ஆகும்.' 'காதலர் ஒருவரை ஒருவர் காண்பது முதல் திருமணத்திற்குப் பின் நடத்தும் வாழ்க்கை நிலைகள் வரையில் குழந்தை பெற்று வளர்த்தல், ஊடல் முதலியன உட்பட நானுாறு துறைகளையும் ஒரு வாழ்க்கை வரலாறு போல் தொடர்ந்து காட்டுவது கோவை. - - 'அந்தக் காதலர் சங்க இலக்கியத்தில் உள்ளவாறு கற்பனைக் காதலர்களே. காதலர் கண்ட இடம், பழகிய வேலை முதலியவற்றைச் சொல்லும் போதும், உவமைகளை அமைக்கும் போதும், ஒரு அரசனையோ, வள்ளலையோ, தெய்வ்த்தையோ புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த நானூறு பாட்டுகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் பற்றி அந்தத் தலைவனுடைய மலை, நாடு, ஆறு, பண்பு, செயல்கள் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று புகழப்படும். அவ்வாறு அமையும் நூல் வகையே கோவை’ என்பார் டாக்டர் மு. வரதராசன். 7 மது. ச. விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாறு, தஞ்சாவூர், 1967, பக்.215. 8 வச்சணந்தி தேவ முனிவர் எழுதிய, வச்சணந்திமாலை என்னும் வெண்பாப் பாட்டியலும், வரையறுத்த பாட்டியலும், கொ. இராமலிங்கத் தம்பிரான் உரை, சென்னை, 1969, பக். 35. - 9 தமிழ் இலக்கிய வரலாறு, புதுதில்லி, 1980, பக். 140. 34