பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'யாவையும்பாடிக் கோவைபாடு’ கோவை பாடுவது அவ்வளவு எளிதன்று. ஏனை இலக்கியங்கள் பாடிப் புலமைத்தழும்பேறியபெரும்புலவர்க்கேஇயன்றஒன்று. இது கருதியே யாவையும் பாடிக் கோவை பாடு' எனும் வழக்குளது. இறைவனுக்கு உகந்த ஒன்றாக இவ் இலக்கிய வகை உள்ளது; பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக என்று இறைவனே வேண்டினார் என்று தமிழ் இலக்கிய வரலாற்றில் காணமுடிகிறது. 'தமிழிலக்கணத்துள் ஒரு கூறாகிய அகப்பொருள் இலக்கணத்துக்குரிய அனைத்துத் துறைகளையும் நிரல் படி அமைத்து கோத்துக் கற்பனைச் செறிவுடன் பாடப் பெறும் ஒருவகை அகப்பொருள் சிற்றிலக்கியமான கோவையை A kind a love - poem என்று குறிப்பிடலாம்'. - பாண்டிக்கோவை கோவைச் சிற்றிலக்கியத்தில் காலத்தால் முந்தியது நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டியன் கள்லத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமான் இயற்றிய பாண்டிக் கோவை என்னும் பெயரிய கோவை இலக்கியமேயாகும். ஆசிரியர் பெயர் தெரியாத நிலையில் 350 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. - இறையனாரகப் பொருளுரையில் மேற்கோளாகக் காட்டப்படும் 'பாண்டிக் கோவை பாண்டிய மன்னனது நெல்வேலி வெற்றிகுறித்து பெரிதாகப் பாராட்டிப் பாடுகின்றது. " இது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது. ' வையாபுரிப் பிள்ளை பதிப்பித்த களவியற் காரிகை உரையே முதன் முதலாக இந்நூற் பெயரை ஐயத்துக்கிடமின்றிக் குறிப்பிட்டது. களவியல், களவியற் காரிகை இரண்டிலும் கிடைத்த இந்நூற்பாடல்கள் 349. பின்னர் இளம்பூரணர் உரையில் ஒரு பாடல் கிடைத்தது. இவை வே. துரைசாமி ஐயரால் தொகுத்து விளக்கத்துடன் 1957 இல் அச்சிடப் பெற்றன. " - மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்ததால், திருவாதவூரர் என்று அழைக்கப் பெற்றவர் மணிவாசகர்; ஆமாத்தியர் குலத்து அந்தணர். எட்டாந் திருமுறையான திருவாசகம் பாடியவர். இவர் பாடிய திருக்கோவையார் சிறப்பாகப் போற்றப்படுகிறது. 10 மு. கோவிந்தசாமி, இலக்கியத் தோற்றம், சென்னை, 1960 பக். 143. 11 மு.க. அருள்சாமி, தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை, 1970, பக். 206, 12 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினொராம் நூற்றாண்டு, திருச்சிற்றம்பலம், 1971, பக். 163. 35