பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் தேவாரப் பெரியோரும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் போன்றாரும் அகப்பொருள் துறை வழிநின்று பேரின்பக் காதல் பாடினர். ஆண்டாள் கண்ணனைக் காதலனாகவே கொண்டு பாடினாள். தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் அவ்வாறே பாடினார். சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பெற்ற சமயக் கோவை நூல் 'திருக்கோவையார் ஆகும். இது இராசாக்கோவை' என்றும் பாராட்டி அழைக்கப்படும். - ‘மண்ணுலக மன்னவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பாண்டிக் கோவை முதலிய கோவை நூல்களைப் போலாது திருச்சிற்றம்பல முடையானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமை இந்நூற்குத் தனிச் சிறப்புத் தருவதாகும்' என்பர் வித்துவான் செ. வேங்கடராமச் செட்டியார். " 'திருக்கோவையாரின் பேரின்பக் கருத்துஞ் சிற்றின்பக் கருத்தும் அறியற்பாலன. முன்னையது சிவாநுபவம் உடையார்க்கே முற்றிலும் விளங்கு மென்றும், பின்னையதனையே பிறர் ஆயக்கடவரென்றம், அந்நூற்கு உரை செய்த பேராசிரியர் மொழிந்தனர் என்பர் கா. சுப்பிரமணியபிள்ளை. " திருக்கோவையாரின் பாடல்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறையில் அமைந்து அதுவே பின்னர் எழுந்த கோவை நூற்களுக்குரிய யாப்பு இலக்கண மரபாக நிலைத்துள்ளது எனலாம். " - - களவியற் காரிகையில் எடுத்தாளப்பட்டுள்ள திருக்கோவையாருக்கு 'திருச்சிற்றம்பலக்கோவை' என்று இடப்பெயர் சுட்டியும் ஒரு பெயர் உண்டு. திருத்தணிகைவிசகப்பெருமாளையரும் பெருமழைப்புலவர்பொ. வே. சோமசுந்தரனாரும் திருக்கோவையாரின் 400 பாடல்களுக்கு விளக்கவுரை தந்துள்ளனர். " மாணிக்கவாசகசுவாமிகள் அருளிச்செய்த திருச்சிற்றம்பலக் கோவையாருண்மை, யாழ்ப்பாணத்து வண்ணைநகர்ச் சுவாமிநாத பண்டிதரால் 163பக்கங்களில் வெளியிடப்பட்டது. 13 ந. சஞ்சீவி, பதிப்பாசிரியர், தெய்வத்தமிழ், சென்னை, 1975,பக். 157, 14 இலக்கிய வரலாறு, இரண்டாம் பாகம், சென்னை, 1956 பக். 276. 15 ச.வே. சுப்பிரமணியன், தா.வே. வீராசாமி பதிப்பு தமிழ் இலக்கியக் கொள்கை - ஓர் அறிமுகம், திருவாசகம், திருக்கோவையார் ஏ.என். பெருமாள். உலகத் தமிழாராய்ச்சிநிறுவனம், சென்னை, 1975, பக். 211. 16. சைவ சமயாசாரியாராகிய-மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருக்கோவையார், பூர்லது அம்பலவாண தேசிக மூர்த்திகள் ஆஞ்ஞையின் படி திருமயிலை செந்தில்வேலு முதலியாரால் சென்னை கவாரத்நாகர அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்ட நூல்; மற்றும் திருக்கோவையார் பழைய உரையும் புதிய விளக்கமும் 1970, சென்னையிலிருந்து வெளிவந்த நூல். 36