பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்சந்தமாலை களவியற்காரிகை உரைகாரர் மேற்கோள்களை எடுத்தாளும்போது எட்டு இடங்களில் முதலில் திருக்கோவையார், இரண்டாவது பாண்டிக்கோவை, மூன்றாவது பல்சந்தமாலை என்று அமைத்து இருப்பதால், பல்சந்தமாலையும் கோவையாகலாம் என்ற எண்ணம் வலியுறுகிறது என்பர் மு. அருணாசலம். இதனை அறிஞர் ம. முகம்மது உவைஸ், பி.மு.அஜ்மல்கான் ஆகியோரும் வலியுறுத்துகின்றனர். தெய்வத்தின் மேல் (தல சம்பந்தமாக) - தெய்வத்தினைப் பாடும் மரபினை ஒட்டி தல சம்பந்தமாக மதுரைக் கோவை, திருவாரூர்க் கோவை, வெங்கைக் கோவை, திருக்கழுக்குன்றக் கோவை, திருப்பதிகக் கோவை, பழனிக் கோவை, மயூரகிரிக் கோவை, சீகாழிக் கோவை முதலியவாகப் பல நூல்கள் பின்னர் பாடப்பட்டன. அம்பிகாபதிக் கோவை 564 செய்யுட்களைத் தன்னகத்தே கொண்டு, சொல்லணி, பொருளணி முதலிய அணிகள் யாவும் ஒருங்கே அமைந்து கற்றார் நெஞ்சம் கனிவு கொள்ளுமாறு விளங்கும் நூல் 'அம்பிகாபதிக் கோவை ஆகும். கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி, செளந்தரியலகரியைத் தமிழில் பாடிய வீரைக் கவிராச பண்டிதர் மகன் வீரை அம்பிகாபதி, தண்டியலங்கார நூல் செய்த தண்டியாசிரியர் தந்தையார் அம்பிகாபதி ஆகிய இம்மூவரில் ஒருவரோ, அல்லது இவரல்லாத மற்றொருவரோ பாடியது அம்பிகாபதிக் கோவை ஆகும். ' . செய்யுள்மிகுதியாக உள்ளதும், சில புதியதுறைகளைக் கொண்டதுமான அம்பிகாபதிக் கோவைநூல் கி.பி. 1899 இல் திருநெல்வேலி ஆரியப் பிரகாசினி அச்சுக்கூடத்தில் ஹரிஹரஐயரால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. "பின்னர் சென்னையிலிருந்து 352 பக்கங்களைக் கொண்ட நூலாகவும் வெளி வந்துள்ளது. " அசதிக் கோவை 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்மூதாட்டி ஒளவையாரால் 17 செ. ரெ. இராமசாமிபிள்ளை, அம்பிகாபதி கோவை ஆராய்ச்சி உரையில் . . . 18.அ.ச. ஞானசம்பந்தன் பொதுப்பதிப்பாசிரியர், தமிழ்நூல் விவரஅட்டவணை, 18671900, முதல் தொகுதி, ஐந்தாம் பகுதி, சென்னை, 1964,பக்.590. 19 வித்துவான்மீ. பொன் இராமநாதன் செட்டியார் எழுதிய உரையுடன் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1952 இல் வெளியான நூல். 37