பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடப்பெற்றது அசதிக்கோவை ஆகும். அசதிக்கோவைநூல் இப்போது கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இதன் சில பாட்டுக்கள் மட்டும் கிடைக்கின்றன. ஒட்டக்கூத்தர் சீகாழியோ, மணக்குடியோ, கூத்தனூரோ, மலரியோ எதுவாயினும் சோழமண்டலத்தில் உள்ள ஒரு ஊரில் பிறந்தவர் ஒட்டக்கூத்தர். " ஒட்டம்-பந்தயம். ஒட்டம் வைத்துப் பாடிப்புகழ்பெற்றவராதலின் ஒட்டக்கூத்தர் என இவர் பெயர் வழங்கியது . (தி. சங்குப் புலவர், விக்கிரம சோழனுலா, 1960, பக்.20) குலோத்துங்கசோழன் கோவை தந்துவாயர் என்னும் செங்குந்தர்கள் (கைக்கோளர்) மரபிற் பிரபல வித்துவானாகப் பிறந்தவரான ஒட்டக்கூத்தர்’ தம்மை ஆதரித்த குலோத்ததுங்க சோழன் மீது அகப்பொருட் துறைகளால் அமைந்த கோவை யொன்றும், உலாவும், அந்தாதியும் செய்தனர். இவரது குலோத்துங்க சோழன் கோவை' என்பது சொல் நயமும், பொருள் நயமுங் கனிந்து கற்பனைக் களஞ்சியமாக ஒளிர்கிறது என்பர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார். இக்கோவை 510 செய்யுட்களை உடையது. காங்கேயன் நாலாயிரக்கோவை ஒட்டக்கூத்தர் பாடிய இன்னொரு கோவை காங்கேயன் நாலாயிரக் கோவை ஆகும். நாலாயிரக் கோவை என்பது நாலாயிரஞ் செய்யுட்களை உடையதென்று அப்பெயரால் ஊகிக்கப்படுகிறது. துறைக்குப்பத்துப்பத்தாகநானூறுதுறைக்கும் நாலாயிரம் செய்யுள் பாடியிருத்தல் கூடும் என்பர் உ.வே. சாமிநாதையர். தஞ்சைவாணன் கோவை வையைக் கரையில் திருப்புவனம் - மானாமதுரைக்கு இடைப்பட்ட நிலப்பகுதி மாறை நாடாகும். மாறைநாட்டுத் தஞ்சையில் தஞ்சாக்கூரில் வாழ்ந்து கொண்டிருந்த வாணன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது தஞ்சைவாணன் கோவை ஆகும். இது தொண்டை மண்டலத்து, செங்காட்டுக் கோட்டத்தைச் சேர்ந்த பொய்யா மொழிப் புலவரால் பாடப்பட்டது. ” திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு அடுத்த நிலையில் வைத்துப் பாராட்டப்படும் பெருமை வாய்ந்த தஞ்சைவாணன் கோவை சொல் வளமும், 20 ச.கு. கணபதி ஐயர், ஒட்டக்கூத்தர், சென்னை, 1957, பக். 14. - 21 அஷ்டாவதானம் வீராசாமி செட்டியாரவர்கள்.அச்சிட்ட, விநோத ரசமஞ்சரி, சென்னை, 1927,பத். 220. 22 பரிதிமாற்கலைஞர், தமிழ் மொழியின் வரலாறு, மதுரை, 1927, பக். 94. 23 தி. வை. சதாசிவபண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு, 13, 14, 15 ஆம் நூற்றாண்டுகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1977, பக். 48. 33