பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் வளமும் நிறைந்தது. நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கத்திற்குச் சிறந்ததோர் இலக்கியமாக நிலவும் சிறப்புடையது. 425 செய்யுட்களைக் கொண்டது. திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் வெளியிடப்பட்டது. குன்றத்தூர் அட்டாவதானம் சொக்கப்ப நாவலர் எழுதிய பேருரையும், களவியல் நிகழ்ச்சிகளுக்கு நாட்கள் வரையறை செய்து அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும். - 425 செய்யுட்களைக் கொண்ட இந்த நூல் சண்முகம்பிள்ளை, ப.மு. செல்வராச முதலியாரால் அமெரிக்க அச்சுக்கூடத்தில் கி.பி. 1893 இல் மறுபதிப்பு செய்யப்பட்டது. " பின்னர் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினராலும் இந்த நூல் பதிப்பிக்கப்ப்ட்டது. திருப்பதிக் கோவை மாறனகப் பொருளிற் களவியல், வரைவியல், கற்பியற் சூத்திரங்களுக்கு இலக்கியமாகத் திருமால் உகந்தருளிய நிலங்களின் விஷயமாய்ச் சற்றேறத்தாழ 455 துறைகள் அமைந்த 527 கட்டளைக் கலித்துறைகளாற் பல்வகை நயமும், ஒருங்கே அமைய இயற்றப்பட்ட கோவை திருப்பதிக் கோவை ஆகும். இதனை இயற்றியவர் விவரம் கிடைக்கவில்லை. ; என்றாலும், திருக்குருகைப் பெருமான் கவிராயரால் இயற்றப்பட்டிருக்கக் கூடுமென்று, செந்தமிழ் உதவிப் பத்திராசிரியர் கி. இராமநுஜையங்கார் தெரிவித்துள்ளார். இவர் இயற்பெயர் சடையன் என்றும் இவர் வேளாளகுலத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர் மு.அருணாசலம். (திருக்குருகைப் பெருமாள் கவிராயர், 1975, பக் 4.) திருப்பதிகக் கோவை ασπιρ நாட்டில் திருப்புலியூரில் சைவ வேதியர் குலத்தில் தோன்றிய உமாபதி சிவாசாரியாரால் பாடப்பட்டது திருப்பதிகக் கோவை ஆகும். இது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர் முனைவர் ந.வீ. செயராமன். கப்பற் கோவை பாண்டி நாட்டுக் கப்பலூரைத் தலைநகராகக் கொண்டு அதனைச் 24 தமிழ் நூல் விவர அட்டவணை முதல் தொகுதி, இரண்டாம் பகுதி 1867 - 1900, வெ. கண்ணையன்பொதுப்பதிப்பாசிரியர், மு. சண்முகம் பதிப்பாசிரியர், சென்னை, 1963, பக். 63 25 மாறகைப் பொருளும், திருப்பதிக் கோவையும் செந்தமிழ் பிரசுரம் 55. மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1932, முகவுரை பக். vi. 39