பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ந்த நிலப்பரப்பை ஆட்சி புரிந்தவனும், பாண்டியர்க்குப் படைத்தலைவனாக விளங்கியவனுமாகிய கருமாணிக்கன் என்ற தலைவன் மேல் பாடப்பட்டது கப்பற் கோவை'யாகும். 24 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாடப்பட்ட இக்கோவை 400 பாடல்கள் கொண்டதாகும். இதன் பிரதி ஒன்று எரிவாய்ப்பட்டு அழிந்து போயிற்று என்று மு. ராகவையங்கார் ‘செந்தமிழ் ஆறாந்தொகுதியில் எட்டாம் பகுதியில் எழுதிய ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார். பின்னர் உ.வே. சாமிநாத ஐயர் நூல் நிலையத்தில் இதன் ஏட்டுப் பிரதிகள் கிடைத்தன. " அரசாங்க உதவியோடு, 1958 ஆம் ஆண்டு, உ.வே.சா நூல் நிலைய வெளியீடு எண் 17 ஆக, T. சந்திரசேகரன் பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நூல் வெளிவந்தது. திருவாரூர் பூரீவைத்திய நாத தேசிகர் உரையுடன் இயற்றப் பெற்றதும் குட்டித் தொல்காப்பியம் என்னும் சிறப்புப் பெயர் வாய்ந்ததுமான இலக்கண விளக்கம் நூலில் இக்கோவையிலிருந்து எட்டுப்பாடல்கள் மேற்கோளாக எடுத்தாளப் பெற்றிருக்கும் சிறப்புப் பெற்ற இக்கோவை 220 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. " சதமணிக் கோவை அருள்நந்தி சிவத்தின் மாணாக்கரும், உமாபதி சிவத்தின் குருவுமான கடந்தை மறைஞான சம்பந்தர் பாடியது சதமணிக் கோவை. (மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16ஆம் நூற்றாண்டு, 1975, பக்360) அண்ணாமலைக் கோவை கமலைஞானப்பிரகாசரால் பாடப்பெற்றது.அண்ணாமலைக் கோவை ஆகும். நெல்லை வருக்கக் கோவை வேம்பத்துரர் சங்கப் புலவரில் ஒருவரான வீரை அம்பிகாபதிப் பெருமாளையரால் பாடப்பெற்றது. நெல்லை வருக்கக் கோவை ஆகும். திருவாரூர்க் கோவை கி.பி. 1572 இல் திருவண்ணாமலைக்கு 25 மைல் தூரத்திலுள்ள (40கி.மீ.) தாழைநகரிற் பிறந்தவ எல்லப்பபூபதி என்ற எல்லப்ப நயினார் இயற்றிய திருவாரூர்க் கோவை 496 செய்யுட்களை உடையது. * 26 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14ஆம் நூற்றாண்டு, பக். 324. 27 கப்பற் கோவை, ட, ரீநிவாஸன் முன்னுரை, சென்னை 1958 பக்.x - 28 ந.சி. கந்தையாபிள்ளை, தமிழ்ப்புலவர் அகராதி, புலவர் அகரவரிசை, சென்னை, 1960, பக். 73. 4C