பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரவாணன் கோவை காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள பூதூரில் கி.பி. 1654 இல் வடுக நாத முதலியாரின் புதல்வராகப் பிறந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார். இலங்கை அரசன் பரராசசேகரனிடம் பரிசில் பெற்று வந்தவர். இவர் இயற்றிய நூல் சந்திரவாணன் கோவை ஆகும். ஒரு துறைக் கோவை அகத்திணைக் கோவைகளில் கிளவித் தலைவனைத் தவிர்த்துப் பாட்டுடைத் தலைவன் ஒருவனைப் பற்றித் தொடர்ந்து ஒவ்வொரு பாடலிலும் அவன் பெயர், நாடு, கொடைப்பண்பு, வீரம் முதலியவற்றை அடைமொழி யாகவோ உவமையாகவோ சார்த்திப் பாடுவது ஒரு மரபாயிற்று. பல்வறுே துறைகளைப் பாடாமல் ஒரே துறையைப் பற்றி நானூறு பாடல் பாடித் திறமையை வெளிப்படுத்தும் முறை உருவாயிற்று. இரகுநாத சேதுப்தி ஒரு துறைக் கோவை பாண்டி நாட்டிலுள்ள பொன்னங்கால் என்னுமிடத்தில் பிறந்தவர் அமிர்தகவிராயர் (கி.பி. 1687 - 1672). இராமநாதபுரத்தை ஆண்ட தளவாய் இரகுநாத சேதுபதியால் (கி.பி.1649 - 1685) ஆதரிக்கப்பட்டவர். தம்மை ஆதரித்த அரசனின் புகழை நிலைநாட்ட ஒரு துறைக் கோவை' நூலைப் பாடினார். ஒரு துறைக் கோவையின் முதல் நூலான இதனை கி.பி. 1889 இல் சென்னை கேசவலு நாயுடு பூர் மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார். 'நாணிக் கண் புதைத்தல்' என்னும் ஒரு துறைப் பொருள் பற்றி அமைந்தது இந்த நூலாகும். திருச்செந்தூர்க் கோவை இராமநாதபுரம் 'கடாரம்' ஊரைச்சேர்ந்த சைவப் புலவர் சர்க்கரைப் புலவர் (1645 - 1670). இவர் பாடியது திருச்செந்தூர்க் கோவையாகும். - தாமோதரன் கேள்விக் கோவை - சேதுபதியின் அமைச்சர் தாமோதரனால் சிறுகம்பையூர், கொந்தன் குளம், கூத்தக்குடி ஆகிய இடங்களில் மானியம் அளிக்கப்பட்ட சர்க்கரைப் புலவர் அமைச்சரின் வேண்டுகோளின் படி வேதாந்த சூடாமணி சித்தாந்த உரை செய்ததோடு நில்லாமல், அமைச்சர் தாமோதரன் மீது 'கேள்விக் கோவை'யும் பாடியவர். இவரை பொன்னெட்டிமாலை சர்க்கரைப் புலவர் என்றும் அழைப்பார்கள். 4