பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெங்கைக் கோவை 17ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசுவாமிப் பண்டாரம் என்பவரின் புதல்வராக வீர சைவ மதத்தில் பிறந்தவர் சிவப்பிரகாச சுவாமிகள். விரும்பிய வண்ணங் கவிபாட வல்லவரான இவர் தருமபுரம் ஆதீனத்திலிருந்த வெள்ளியம்பலத்தம்பிரானிடம் இலக்கணங்கற்றவர்:துறைமங்கலத்தில்வாழ்ந்தவர். வீரமாமுனிவருக்கு எதிராக ஏசுமத நிராகரணம் என்னும் நூலை எழுதிய இவரால் பாடப்பெற்றது வேங்கைக் கோவை (திருவெங்கைக் கோவை) ஆகும். பாம்பலங்காரர் வருக்கக் கோவை தொண்டை நாட்டில் தென் களத்தூரில் செங்குந்தர் குடியிற் பிறந்தவர் படிக்காசுப் புலவர் (1686 - 1723). வைத்திய நாத தேசிகரிடம் இலக்கணங் கற்றவர். இவர், இரகுநாத சேதுபதி, வள்ளல் சீதக்காதி முதலியோரைப் பாடிய பல பாடல்கள் உண்டு. தொண்டை மண்டல சதகம் பாடிய இவர் பாம்பலங்காரர் வருக்கக் கோவை என்ற நூலையும் இயற்றியவர். சீகாழிக் கோவை சோழமண்டலத்தில் தில்லையாடியில் கார்காத்த வேளாளர் குலத்தில், நல்ல தம்பிப் பிள்ளை - வள்ளியம்மையின் நான்காம் புதல்வராகப் பிறந்தவர் அருணாசலக் கவிராயர் (1712 - 1779). (எஸ். எஸ். அருணகிரிநாதர்,தமிழ்ப் பெருமக்கள், பக்.23) தருமபுர ஆதீனத்து அம்பலவாணத் தம்பிரானிடம் இலக்கண இலக்கியங்கற்று சீகாழியில் வந்து தங்கி, அத்தலத்தில் இருந்து சீகாழிக் கோவை பாடியவர். தில்லையாடி மணலி முத்துக் கிருட்டிண முதலியாரால் ஆதரிக்கப் பெற்றவர். - குற்றாலக் கோவை திருநெல்வேலி மாவட்டம் திருச்சீவரமங்கை (நாங்குனேரி) வட்டம் விசய நாராயணம் என்னும் ஊரில் பரம்பரைச் சைவ வேளாண் குடியில் தோன்றியவர் மகாகவிதிரிகூடராசப்பகவிராயர் இளமையிலேய்ேதிருக்குற்றாலத்திற்குக் கிழக்கே உள்ளமேலகரத்தில்வாழ்ந்துவந்த இவர்உலகப்பிரசித்திபெற்றகுற்றலாக்குறவஞ்சி யினை இயற்றியவர். இவர் பாடிய கோவை நூல் குற்றாலக் கோவை ஆகும். சேற்றுார்க் கோவை 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவரின் மாணாக்கரில் ஒருவரான சங்கரமூர்த்தி கவிராயர் இராசபாளையத்தில் கார்காத்த வேளாள மரபிற் பிறந்தவர், கன்னிவாடி ஜமீன்தார்மீது கோவை பாடி யானைக் கன்றும் ஊரும் பெற்றவர். இவர் பாடியது சேற்றுார்க் கோவை ஆகும். - 29 க. வச்சிரவேல் முதலியார் எழுதிய முகவுரை, திருக்குற்றாலத் தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனம், 1973, பக். 11. 42