பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயூரகிரிக் கோவை பாண்டிய நாட்டில் திருப்புன வாயிலுக்கு அருகிலுள்ள சிறுகம்பை என்ற ஊரில் பிறந்த சாந்துப்புலவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் பாடியது. மயூரகிரிக் கோவை ஆகும். பழமலைக் கோவை 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீர சைவ மதத்தினர் சாமிநாத தேசிகர். இவர் இயற்றிய நூல் பழமலைக்கோவை. 1935இல் உ.வே.சாமிநாதையரவர்கள் இதனை மறுபதிப்புச் செய்துள்ளார். கரவை வேலன் கோவை யாழ்ப்பாணத்து நல்லூரில் வில்லவராய முதலியாரின் மகனாகப் பிறந்தவர் சின்னத் தம்பிப் புலவர் (1716 - 1780) கரவை என்பது கரவெட்டியென்ற ஊராகும். 'கரவை வேலன் கோவை’ இவர் பாடிய நூலாகும். - திருக்கழுக்குன்றக் கோவை 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவரின் மாணாக்கரில் ஒருவர்சோமசுந்தரம் பிள்ளை. இவர் இயற்றிய நூல் திருக்கழுக்குன்றக் கோவை. விஞ்சைக் கோவை 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டில் வாழ்ந்தவர் பலபட்டடைச்சொக்கநாதப் புலவர். சொக்கர்மீதும், மீனாட்சியம்மை மீதும், பல பாடல்கள் புனைந்தவர். இவர் இயற்றிய நூல் விஞ்சைக் கோவை ஆகும். ஒருதுறைக் கோவைகள் - 'வண்டோச்சி மருங்கணைதல் என்னும் துறை பற்றிய சசிவர்ணன் கோவையையும், 'வெறிவிலக்கு' என்னும் துறையில் கீழ்வேளுர்க் குருசாமி தேசிகர் பாடிய தியாகேசர் கோவையையும் ஒரு துறைக்கோவை இலக்கியங் களாக உ.வே. சாமிநாதையர் எடுத்துக் காட்டியுள்ளார். செண்டத்துர் ஐயாத் துரை முதலியார் மீது துரைச்சாமிப் பாவலர் பாடிய ஒரு துறைக் கோவை 108 பாடல்கள் உடையது. சோடசாவதானம் பொன்னுங்கூடக் கவிராயர் சாப்டூர் எனும் மருதூர் ஜமீந்தார் நாயகசாமி நாயக்கர் மீது ஒருதுறைக்கோவை பாடியுள்ளார். கல்போது பிச்சுவையரும் * ஒருதுறைக் கோவை பாடல்களை இயற்றியுள்ளார். வைத்தியலிங்கம் என்பவரும் ஒருதுறைக்கோவை' பாடியுள்ளார். 43