பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசராச சேதுபதி ஒருதுறைக்கோவை சேது சமத்தான மகா வித்துவான் ரா. இராகவையங்கார் முத்துராமலிங்க சேதுபதி என்ற இராசராச சேதுபதி மீது 400 பாடல்களைக் கொண்ட ஒருதுறைக் கோவை பாடியுள்ளார். " வருக்கக் கோவை அகர முதலான தமிழ் எழுத்துக்களின் வரிசைப்படி தொடக்கம் அமைந்ததும், ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பாடல் எனப்படும் வருக்கக் கோவை என்பதொரு கிளையும் இதிற் பிரிந்து வளர்ந்தது. வடகர்ை சமஸ்தானம் முத்துசாமித் துரையவர்கள் பேரில் பாடப்பெற்ற வருக்கக் கோவையும், செம்புலிப் பெரிய சுவாமித்துரை அவர்கள் பேரில் சிவகுருநாதக் கவிராயர்கள் பாடிய வருக்கக் கோவையும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. " திருவாவடுதுறைக் கோவை திருவாவடுதுறையிற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பூர் மாசிலாமணி ஈசர் மீது திருவாவடுதுறையாதீனத்துச் சுப்பிரமணி முனிவர் இயற்றியது திருவாவடுதுறைக் கோவை ஆகும். இது துறைசைக் கோவை எனவும் வழங்கப்படும். (துறசை-திருவாவடுதுறையென்னும் பெயரின் மரூஉ) சிவஞானமுனிவரின் மாணவரான இவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர். தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவரெனவும் அழைக்கப்பட்டவர். 1903 இல் பதிப்பிக்கப் பெற்ற இந்த நூலை, உ.வே. சாமிநாதையர் 1926 இல் திரும்பவும் அரும்பதவுரை முதலியவற்றுடன் பதிப்பித்தார். 457 பாடல்களைக் கொண்ட நூல் இது. " கலைசைக் கோவை சிதம்பரத்தைச் சார்ந்த காட்டு மன்னார் கோயிலில், கார் காத்த வேளாளர் மரபில் பிறந்த தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் இயற்றிய இன்னொரு கோவை நூல் கலைசைக் கோவை ஆகும். சென்னைக்குச் சமீபமாயுள்ள ஆவடி அருகே உள்ளே தொட்டிக்கலை யென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள பூரீசிதம்பரேசரைப் பாட்டுடைத் 30 ரா. இராகவையங்கார், இராசராச சேதுபதி ஒருதுறைக்கோவை, சிதம்பரம், 1984. 31 திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரையாதிக்கத்தின் சரித்திரம், வாலம் i, பலவித்துவான்களியற்றிய பதினான்கு பிரபந்தங்கள், மதுரை, 1916, ೬à, 188-208, 315-33). 32 தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருவாவடுதுறைக் கோவை, உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1926 (128 பக்கங்களைக் கொண்ட நூல்.) 44