பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவராக வைத்து பாடப்பட்டது இக்கோவை. தொட்டிக்கலை என்பதன் மரூஉ கலைசையென்பதால் இது கலைசைக் கோவை' என்று அழைக்கப்பட்டது. 457 பாடல்களைக் கொண்ட இந்தக் கோவை நூல் உ.வே. சாமிநாதையரவர்களால் பதிப்பிக்கப்பட்டது. " அருளம்பலக்கோவை யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வல்லுவெட்டி என்ற ஊரில் கதிர்காம பூபதி முதலியாரின் மகனாகப் பிறந்தவர் குமாரசுவாமி முதலியார். 19 ஆம் நூற்றாண்டின்பிற்பகுதியில் வாழ்ந்த இவர்பாடியது அருளம்பலக்கோவை ஆகும். - - - அலங்காரக் கோவை இராமநாதபுரம் சிற்றரசில் தலைமை பெற்று கி.பி. 1890 வரை வாழ்ந்த பொன்னுச்சாமி தேவர் யமகம் பாடுவதில் வல்லவர். இராசமன்னார் கோவில் தலபுராணம் பாடிய இவர் அலங்காரக் கோவையையும் இயற்றியுள்ளார். சொக்கலிங்கநாயகர் வருக்கக் கோவை - அழகிய சிற்றம்பலக் கவிராயர் மரபில் வந்த மங்கைபாகக் கவிராயர் சொக்கலிங்க நாயக்கர் மீது வருக்கக் கோவை என்னும் நூல் பாடியுள்ளார். குளத்துார்க் கோவை 6 - 4 - 1815 இல் சிதம்பரம்பிள்ளை - அன்னத்தாச்சி புதல்வராகத் தோன்றியவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, 75 நூல்களுக்கு மேல் பாடிய இவரிடத்துக் கல்வி பயின்ற மாணவருள் ஒருவர் உ.வே. சாமிநாதையர் ஆவார். மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை தமிழ், ஆங்கில மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். தருமபுர ஆதீனத் தலைவருக்கு அடங்காமல் விரோதமாக நீதிக்குப் புறம்பாக நடக்க ஆரம்பித்த மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் கட்டளைத் தம்பிரானின் வழக்கில், முன்சீப் வேதநாயகம் பிள்ளை நியாயத்தின்பக்கம் நின்றார். அதனை அறிந்த, மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர் மீது 438செய்யுட்களைக் கொண்டஐந்திணைக் கோவை நூலான குளத்தூர்க் கோவையை 1853 இல் பாடினார். " 33 மதுரைத் தமிழச்சங்க முத்திராசாலையுடன் 1935 இல் செந்தமிழ்ப் பிரசுரம் வெளியிட்ட 132 பக்கங்களைக் கொண்ட நூல். - 34 உ.வே. சாமிநாதையர், ஆர்மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், 1938, பக். 152. (இதன் மறுபதிப்பினை 1986இல் தஞ்சாவூர் தமிழப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது). 45